முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி அழகிரி மீதான பிடிவாரண்ட் வழக்கு ஒத்திவைப்பு

புதன்கிழமை, 10 அக்டோபர் 2012      ஊழல்
Image Unavailable

 

மேலூர், அக்.11 ​ மேலூர் கோர்ட்டில் தயாநிதி அழகிரி மீதான பிடிவாரண்ட் வழக்கு வருகிற 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த தி.மு.க ஆட்சி யின் போது மதுரை மாவ ட்டம் மேலூர் பகுதிகளில் கிரானைட் முறைகேடு தொடர்பாக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அடங்கிய 18 குழுக்கள் அமைக்கப்பட்டு மேலூர், கீழவளவு, கீழையூர் உள் ளிட்ட பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் கண்டறிய ப்பட்டது. 

கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி. பங்குதாரர் பழனிச்சாமி, பன்னீர் முகமது ஆகியோர் கைதாகி சிறையில் உள்ளனர். மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, சிந்து கிரானைட் அதிபர் செல்வராஜ் உள் ளிட்டோரது முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கிரானைட் முறைகேடு வழக்குகள் தொடர்பாக பி.ஆர். பி. பங்குதாரர் பழனிச்சாமி யின் மகன்கள் செந்தில் குமார், சுரேஷ்குமார் மற்றும் ஒலம்பஸ் இயக் குனர்  தயாநிதி அழகிரி, நாகராஜன் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க கோரி மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் டி.எஸ்.பி. தங்கவேலு மனுத் தாக்கல் செய்திருந்தார். நீதிபதி ஜெய்குமார் எதிர் தரப்பினர் கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து பிடிவாரண்ட் தொடர் பான வழக்கை நேற்று (10.10.2012) தள்ளி வைத் திருந்தார். அதன்படி நேற்று வழக்கு நீதிபதி ஜெயக்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பி.ஆர்.பி. தரப்பில் வக்கீல் மனோ கரனும், தயாநிதி அழகிரி தரப்பில் வக்கீல் மோகன் குமாரும் ஆஜரானார்கள். அப்போது அவர்கள் வாதிடுகையில், கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை 11 ம் தேதி(இன்று) மதுரை ஐகோர்ட் கிளையில் வரு கிறது. எனவே இந்த பிடி வாரண்ட் வழக்கை ஒத்தி வைக்க கோரினர். இதனை தொடர்ந்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை நாளை 12 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago