முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா சாதனை துண்டறிக்கைகள் அமைச்சர் விநியோகம்

புதன்கிழமை, 10 அக்டோபர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 11 - முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கி பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கோகுல இந்திரா துண்டு பிரசுரங்களை விநியோகத்தார். பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட ஜெயலலிதா ஆட்சியின் சாதனை துண்டறிக்கை விபரம் வருமாறு:-

தமிழ்நாட்டின் மொத்த வளர்ச்சி ஆண்டொன்றுக்கு 11 விழுக்காடோ, அதற்கு மேலோ இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகின்ற மொத்த வளர்ச்சியைக் காட்டிலும் 20 விழுக்காடு தமிழகம் கூடுதல் வளர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையிலும், தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம்-2023 வகுத்து செயல்படுத்துபவர் எங்கள் புரட்சித்தலைவி அம்மா.

கருணாநிதியின் துரோகத்தையும் மீறி, காவிரிப் பிரச்சனையில் தமிழகத்திற்கு நீதி கிடைக்கப் போராடி உச்சநீதிமன்றம் சென்று தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி, குறைந்தபட்சம் இடர்பாடு பங்கீட்டு முறையின்படி காவிரி நதிநீரைப் பெற்றுத் தந்தவர் எங்கள் புரட்சித்தலைவி அம்மா.

காவேரியில் தமிழகத்திற்குரிய பங்கினை உரிய நேரத்தில் கர்நாடகம் விடுவிக்காத போதிலும் 1 லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ள டெல்டா விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரத்தை வழங்கியவர் எங்கள் புரட்சித்தலைவி அம்மா.

குடும்ப அட்டைதாரர்களுக்கு மாந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கி பசியில்லாத் தமிழகம் படைத்தவர் எங்கள் புரட்சித்தலைவி அம்மா.

இல்லத்தரசிகளின் இதயம் குளிர விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்குபவர் எங்கள் புரட்சித்தலைவி அம்மா.

அரசுப் பணி செய்யும் தாய்மார்களுக்கு, ஆறுமாத பிரசவ விடுப்பு அளித்த தாயுள்ளம் கொண்ட தங்க முதல்வர் எங்கள் புரட்சித்தலைவி அம்மா.

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண், முதியோர், மாற்றுத்திறாளிகள் என நலிந்த மக்களுக்கான ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கியவர் எங்கள் புரட்சித்தலைவி அம்மா.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றலைத் தவிர்த்திட 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கியவர் எங்கள் புரட்சித்தலைவி அம்மா.

10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு நான்கு சீருடைகள், காலணிகள், புத்தகப் பை, வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி, பூகோள வரைபடம், பாடப் புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் என தேவையான அத்தனை உபகரணங்களையும் வழங்கியவர் எங்கள் புரட்சித்தலைவி அம்மா.

மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கியவர் எங்கள் புரட்சித்தலைவி அம்மா.

மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மிதிவண்டி வழங்கியவர் எங்கள் எங்கள் புரட்சித்தலைவி அம்மா.

ஏழைப் பெண்களின் திருமணக் கனவை நனவாக்கி 10,12-ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம் ரூ.25,000/- மும் நிதியுதவி வழங்கிய தங்கத்தாரகை, தமிழக முதல்வர் எங்கள் புரட்சித்தலைவி அம்மா.

பட்டம், பட்டயம் படித்த பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவியோடு தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கிடும் தங்கமனம் படைத்த தமிழக முதல்வர் எங்கள் புரட்சித்தலைவி அம்மா.

கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தந்தவர் எங்கள் புரட்சித்தலைவி அம்மா.

ஏழை, எளிய மக்கள் உரிய சிகிச்சை பெற ஏதுவாக, ஒரு குடும்பத்திற்கு ஆண்டொன்றிக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை கிடைப்பதை உறுதி செய்யும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தந்தவர் எங்கள் புரட்சித்தலைவி அம்மா.

ஏழை எளிய மக்கள் வாழ்வை வளம் பெறச் செய்து தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றிட அல்லும் பகலும் அயாரது பாடுபடும் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கே என்றும் மக்கள் ஆதாரவு இதுவே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஒருமித்த கருத்து.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago