முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டமன்ற புதிய சபாநாயகராக ப.தனபால் பதவி ஏற்பு

புதன்கிழமை, 10 அக்டோபர் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, அக். 11 - தமிழக சட்டமன்ற புதிய சபாநாயகராக ப.தனபால் நேற்று பதவி ஏற்றார். சபாநாயகர் டி.ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ததையொட்டி புதிய சபாநாயகராக ப.தனபால் அ.தி.மு.க. சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் ப.தனபால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

புதிய சபாநாயகராக ப.தனபால் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. 9.53-க்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்திற்கு வந்தார். 10 மணிக்கு தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன் வந்ததும், திருக்குறள் படித்துவிட்டு சபை நிகழ்ச்சிகளை துவக்கினார். 

புதிய சபாநாயகராக ப.தனபால் பதவி ஏற்பார் என்றும், அவை முனைவர் ஓ.பன்னீர்செல்வமும், எதிர்க்கட்சி துணை தலைவர் பண்ருட்டி ராமசந்திரனும் சபாநாயகர் இருக்கையில் அமர வைப்பார்கள் என்று செ.கு.தமிழரசன் கூறினார். 

இதைத் தொடர்ந்து புதிய சபாநாயகராக ப.தனபாலை ஓ.பன்னீர்செல்வமும், பண்ருட்டி ராமச்சந்திரனும் சபாநாயகராக இருக்கையில் அமர வைத்தனர். 

பின்னர் சபாநாயகர் ப.தனபால் அவையில் உள்ள உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதாவுக்கும் வணக்கம் தெரிவித்து சட்டமன்ற நிகழ்ச்சியை நடத்தினார். 

முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், மு.க.ஸ்டாலின், சி.பி.எம்.செளந்தர்ராஜன், சி.பி.ஐ. ஆறுமுகம், காங்கிரஸ் சார்பில் ஜேக்கப், த.கிருஷ்ணசாமி, ஆர்.சரத்குமார், கதிரவன், ஜவஹுருல்லா, செ.கு.தமிழரசன், தனியரசு ஆகியோர் புதிய சபாநாயகரை வாழ்த்தி பேசினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago