முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நித்தியானந்தா தொடர்ந்த வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, அக்.11 - நித்தியானந்தா சீடரான ஆர்த்திராவ், மற்றும் அவரது தந்தை சேதுமாதவன், மீடியா மற்றும் பத்திரிக்கைகளில் கருத்து தெரிவிக்க கூடாது. அதற்கான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும் என கோரிய நித்தியானந்தாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த மாதம் நித்தியானந்தா சீடரான ஆர்த்திராவ் மற்றும் அவருடைய தந்தை சேதுமாதவன் நித்தியானந்தா குறித்து பல சர்ச்சைகளை ஏழுப்பி தொலைக்காட்சி, மற்றும் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்து வந்தனர்.

இவ்வாறு அவர்கள் பேட்டி அளிக்கக் கூடாது என நித்தியானந்தா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் நேற்று நீதிபதி சந்துரு உத்தரவு பிறப்பித்தார். அதில் தெரிவித்ததாவது:-

மீடியாக்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என சொல்வது தவறானது. கடந்த பல மாதங்களாக நித்தியானந்தா குறித்து மீடியாக்களில் தினந்தோறும் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதே போன்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் பேச்சுரிமையை தடுப்பது முறையாகாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. தன்னுடைய எதிரிகளின் வாயை மூட கோர்ட்டை கருவியாக பயன்படுத்தக் கூடாது. மேலும் சமுக வலை தளத்தில் ஏழுப்பிய 107 கேள்விகளுக்குதான் ஆர்த்திராவ் பதில் தெரிவித்துள்ளார். நித்தியானந்தாவை பற்றி நாடு முழுவதும் மீடியாக்களில், பேசாத விஷயமே கிடையாது. இந்த சூழ்நிலையில் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்