முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அரசு மீது தமிழக அரசு அவமதிப்பு வழக்கு

புதன்கிழமை, 10 அக்டோபர் 2012      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,அக்.11 - காவிரி ஆணைய உத்தரவை அமுல்படுத்துவதை பாதியிலேயே நிறுத்தி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து கர்நாடக அரசு மீது தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. 

சுப்ரீம்கோர்ட்டு கண்டனம் தெரிவித்ததையொட்டியும் காவரி ஆணைய உத்தரவுப்படியும் கடந்த 28-ம் தேதி முதல் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டது. இந்த தண்ணீரை வரும் 15-ம் தேதி வரை திறந்துவிட வேண்டும். தண்ணீரை திறந்துவிட்ட ஒரு சில நாட்களில் கர்நாடக மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து காவிரி ஆணைய உத்தரவை ரத்து செய்யுமாறு கோரினர். இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் மறுத்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த  கர்நாடக அரசோ ஒரு வாரம் மட்டும் தண்ணீரே திறந்துவிட்டு நிறுத்திக்கொண்டது. இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்தது. இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது சுப்ரீம்கோர்ட்டு உத்தரவையும் மீறி தண்ணீரே திறந்துவிடுவதை நிறுத்திய கர்நாடக அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று கர்நாடக அரசு மீது தமிழக அரசு சார்பாக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்