முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்வாடியில் சந்தனக்கூடு ஊர்வலம்: மக்கள் குவிந்தனர்

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

கீழக்கரை.அக்.12 - ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிதர்ஹாவில் அடக்;கம் செய்யப்பட்டுள்ள மகான் குத்பு சுல்தான் செய்யதுஇபுராகிம் 'ஹீது ஒலியுல்லாவின் 840ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா கடந்த செப்17ல்மவுலீதுடன் துவங்கி செப்27ல் கொடியேற்றம் நடைபெற்றது இதைதொடர்ந்து நேற்று முன்தினம் யானைகள் குதிரைகள் அணிவகுக்க மேலதாளத்துடன் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது அதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துமாவட்டங்கள் மற்றும் கேரளா கர்நாடகா. ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களிலிருந்தும் கார்களிலும் வேன்கள்.மற்றும் பஸ்களிலும் ஆயிரகணக்கானவர்கள் வந்து  கலந்து கொண்டனர்.

 

அக்9தேதி அதிகாலை2.30மணியளவில் ஏர்வாடி குடியிருப்பு முஜாவிர் நல்லஇபுராகிம் சந்தனக்கூடு தைக்காவிலிருந்து கரைக்கப்பட்ட சந்தனத்தை வெள்ளி குடத்தில் எடுத்து கொண்டு தர்ஹா ஹக்தார் கமிட்டி தலைவர் அம்ஜத்ஹீசைன் தலைமையில் துணைத்தலைவர் சிராஜீதீன். செயலாளர் செய்யதுபாருக்ஆலிம் அருஸி ஹக்தார் உறுப்பினர்கள் துல்கருணை. சர்தார் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்துவர பின்னால் யானைகள் குதிரைகள் மற்றும் மேளவாத்தியங்கள் முழங்க மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு(ரதம்) ஊர்வலமாக வந்து காலை5மணியளவில் தர்ஹாவளாகம் வந்தடைந்து மாகனின் மக்பராவை(சமாதியை) மூன்றுமுறை வளம்வந்து தர்ஹாவின் முன்பாக சந்தனக்கூடு இறக்கிவைக்கப்பட்டது. முன்னதாக மகானின் மக்பராவில் (சமாதியில்) சந்தனம்புசுைம் விழா நடைபெற்றது மாவட்ட டவுன்காஜி சலாஹீதீன் ஆலிம் உலக ஒற்றுமைக்காகவும் நன்மைக்காகவும் துஆ(பிராத்தனை)ஓதினார் விழாவுக்கான ஏற்பாடுகளை ஊராட்சிமன்றதலைவர் முகம்மது அலிஜின்னா.செயலாளர்அஜ்மல்கான் மற்றும் ஹக்தார்கள் செய்திருந்தனர் டி.ஐ.ஜி ராமசுப்ரமணியன ;உத்தரவின் பேரில் டி.எஸ்.பிகள் இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஆயிரகணக்கான போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ்டுபட்டிருந்தனர் தர்ஹாவில்; 16இடங்களில் ரகசிய கேமராக்கள பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன அனைத்துசமுதாய மக்களையும் ்ர்க்கும் சமூக ஒற்றுமைத்திருவிழாவான சந்தனக்கூடு திருவிழா வரும்16ம்தேதி கொடியிறக்கப்பட்டு அன்று நெய்சோறு(தப்ரூக்) ஆயிரகணக்கானவர்களுக்கு வழங்கப்பட்டு நிறைவுபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago