முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவைத் தாக்கும் ஏவுகணைகள் எங்களிடம் உண்டு

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

சியோல், அக்.12 - அமெரிக்காவின் நாடாளுமன்றத்தை தாக்கும் ஏவுகணைகள் தங்கள் வசம் உள்ளதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக வடகொரியா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கொரியாவும் அமெரிக்காவும் சமீபத்தில் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டன. இதன்மூலம் தென்கொரியாவின் ஏவுகணை பலம் அதிகரித்துள்ளது. இது கொரியா தீபகற்பத்தில் போர் ஏற்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற நாடுகள் குற்றம்சாட்டுவதுபோல், ராணுவ ஆயுதங்களை வடகொரியா மறைத்து வைக்க வில்லை. தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் முக்கிய இடங்களைத் தாக்கும் அபாயகரமான ஏவுகணைகள் எங்களிடத்தில் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா, அவ்வப் போது நடத்தும் ராக்கெட் சோதனைகளுக்கு தென்கொரியா, அமெரிக்கா, ஐநா பாதுகாப்புக் கவுன்சில் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
`வடகொரியா ராக்கெட் பலத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக, அவர்களுடைய நாட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலாண்ட் அறிவுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்