முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீட்டர்சன்அணிக்கு திரும்பவதை வரவேற்கிறோம்: பிராட்

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், அக். 12 -  பீட்டர்சன் அணிக்கு திரும்புவதை வர வேற்கிறோம். அவருடன் எந்த வித பிர ச்சினையும் இல்லை என்று இங்கிலாந் து வீரர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்து இருக்கிறார். இங்கிலாந்து அணியின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன். தெ ன் ஆப்பிரிக்காவில் பிறந்த இவர் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற் கனவே அறிவித்து இருந்தார். டெஸ்டி ல் மட்டும்ஆடி வந்தார். 

சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலகக் கோ ப்பை போட்டியில் விளையாடத் தயா ர் என்றும் பீட்டர்சன் கூறி இருந்தார். ஆனால் இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்கவில்லை. 

இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் நடந்து கொண்டு இரு க்கும் போது, பீட்டர்சன் அதிரடியாக நீக்கப்பட்டார். 

அப்போதைய கேப்டன் ஸ்ட்ராஸ், பயி ற்சியாளர் ஆன்டி பிளவர் ஆகியோரை கிண்டல் செய்து தென் ஆப்பிரிக்க வீரர் களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது. 

தனது செயலுக்கு பீட்டர்சன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இருந்த போதி லும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. 

இந்த நிலையில் பீட்டர்சனுடன் எந்த வித பிரச்சினையும் இல்லை. அவர் அணிக்கு திரும்புவதை வரவேற்கிறோ ம் என்று இங்கிலாந்து அணியின் முன் னணி வேகப் பந்து வீச்சாளரும், 20 ஓவ ர் போட்டியின் கேப்டனுமான ஸ்டூவர் ட் பிராட் தெரிவித்து இருக்கிறார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது 

பீட்டர்சன் அணிக்கு திரும்பவதில் எங் களுக்கு எந்த வித பிரச்சினையும் இல் லை. ஒரு நாள் போட்டியில் அவருடன் விளையாட தயாராக இருக்கிறோம். அவர் அணிக்கு திரும்புவதை ஆவலுட ன் வரவேற்கிறோம். 

அவர் அணியில் இடம் பெறுவதை இங் கிலாந்து கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும். இந்தியா அல்லது நியூசிலாந்து தொடரில் பீட்டர் சன் உறுதியாக இடம் பெறுவார். இவ் வாறு ஸ்டூவர்ட் பிராட் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்