தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை வீட்டுக்கு அனுப்புவோம் - சீமான்

Seeman 2

 

அம்பத்தூர், ஏப்.12 - ஜனநாயக நாட்டை பணநாயகமாக மாற்றிய தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று ஆவடி பொதுக் கூட்டத்தில் இயக்குனர் சீமான் ஆவேசமாக பேசினார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அவர்களுக்கு எதிராக சீமான் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று அவர் காங்கிரஸ் போட்டியிலும் ஆவடி தொகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசினார். 

அப்பொழுது அவர் பேசியாதவது:- காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு மற்றும் கச்சத்தீவு போன்ற எந்த மக்கள் பிரச்சனைக்கும் குரல் கொடுக்காத மானங்கெட்ட மத்திய  மத்திய அரசு இப்பொழுது தேர்தல் என்றவுடன் மக்களிடம் வாக்கு கேட்டு பிச்சை எடுக்கிறது. நாம் மானம் உள்ள தமிழர்கள் என்று நிருபித்து கை சின்னத்தை வீழ்த்தி இரட்டை இலையை மலர செய்ய வேண்டும். ஓர் தென்னை மரம்கூட பிறந்ததற்கும், இறந்ததற்கும் தடம் பதித்து செல்கிறது. தடம் பார்த்து செல்பவன் மனிதன் தடம் பதித்து செல்பவன் மாமனிதன். நாம் ஒவ்வொருவரும் தடம் பதித்து காங்கிரசை வீழ்த்த வேண்டும். இலவசம் தந்தோம் என்று தப்பட்டம் அடிக்கும் கருணாநிதியை நான் கேட்கிறேன், உலகிலுள்ள எந்த மனிதனாவது உங்களிடம்  வந்து இலவச டிவி கொடுங்கள், இலவச கேஸ் கொடுங்கள் என்று கேட்டானா? ஒரு நாட்டில் பட்ஜெட்டில் மக்கள் அடிப்படை தேவைகளான சாலைவசதி, கழிப்பிட வசதி, மின்சாரம், உணவு ஆகியவை முழுவதும் செய்து கொடுத்து மீதி 5000 கோடி இருந்தால் இலவசங்கள் கொடுக்கலாம். ஆனால் நீங்களே தமிழ்நாட்டுக்காக 136 கோடி கடன் வைத்துவிட்டு எதற்கு இலவசம் தரவேண்டும். யார் கேட்டது இலவசம். நீங்கள் ஓட்டு வாங்க இலவச அறிவிப்புகளை கொடுக்கிறீங்க. இந்த இலவசங்கள் மக்கள் வரிப்பணம், என் மக்கள் குடித்தே அரசுக்கு கொடுக்கும் டாஸ்மாக் பணம் ஆகியவை கொண்டு இலவசங்களை தந்துவிட்டு நாங்கள் தான் கொடுத்தோம் என்று தப்பட்டம் அடிக்கிறீங்க. நீங்க என்ன உங்கவீட்டு பணத்திலா கொடுக்கிறீங்க. 

இந்த காங்கிரஸ் அரசு செய்த கொடுமையால் ஈழத்தில் எங்கள் உறவு அழிவின் விளம்பில் நிற்கிறது. முள்கம்பிகளுக்கு நடுவில் மாட்டி தவிக்கிறது. தமிழக மக்கள் இதை மறக்க்கூடாது. கன்னிமாறாவில் மாணவர்கள் உட்கார இடம் இல்லை, ஆனால் சிறைவாசிகளுக்கு இடம்  இல்லை என்று புழல் ஜெயில் கட்டுகிறார்கள். 60 ஆண்டுகளாக சிங்களவனோடு கை கோர்த்து, தமிழன், தமிழ்ச்சி, தங்கை, அக்கா, குழந்தைகள் என நம் இனத்தை அழிக்கும் காங்கிரஸ் கை சின்னத்தை மக்கள் அழித்து, வரும் சட்டமன்ற தேர்தலில்  இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து இங்கு போட்டியிடும் அப்துல்ரஹிம் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ