முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் பூகம்ப பேரழிவின் ஒருமாத நினைவு தினம்

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, ஏப்.12 - ஜப்பானில் கடந்த மாதம் 11 ம் தேதி ஏற்பட்ட பயங்கர பூகம்பம் அதனைத் தொடர்ந்து உருவான சுனாமி பேரலை ஆகிய இயற்கை சீற்றங்களினால் பலியான 25 ஆயிரம்பேரின் ஒரு மாத நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. தங்கள் உற்றார் உறவினர், நண்பர்களை இழந்தவர்கள் அவர்களின் நினைவைப் போற்றி நினைவஞ்சலி செலுத்தினார்கள்.

ஜப்பானில் கடந்த மாதம் 11 ம் தேதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி பேரலைகளும் எழுந்தன. இந்த இரு இயற்கை சீற்றங்களால் ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆயின. இந்த சம்பவங்களில் இதுவரை 25 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூறுகின்றன. இருந்தாலும் பல ஆயிரம் பேரை இன்னும் காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சுனாமி தாக்குதலில் டோக்கயோவில் இருந்து 240 கி.மீ. தொலைவில் உள்ள புகுஷிமா என்ற அணு மின்சார நிலையத்தில் கடல் நீர் உட்புகுந்து அணு உலைகள் வெடித்துச் சிதறின. இதனால் அணு கதிர்வீச்சு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அணுக் கதிர்வீச்சை கட்டுப்படுத்த ஜப்பான் அரசு உலக நாடுகளின் உதவியுடன் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்த அணு மின் நிலையத்தை ஒட்டி வசித்துவந்த 1 லட்டத்து 25 ஆயிரம்பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஒரு மிகப்பெரிய அணு கதிர்வீச்சு அபாயம் ஜப்பானில்  ஏற்பட்டு உள்ளது.  இந்த நிலையில் இந்த இயற்கை சீற்றங்களில் பலியானவர்களின் ஒரு மாத நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. பலியான தங்களது உற்றார், உறவினர், நண்பர்களின் நினைவாக அவர்களை பறிகொடுத்தவர்கள் நேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களின் புகைப்படங்களை வைத்தும், அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வைத்தும், மெழுகுவர்த்தி உள்ளிட்ட தீபங்களை ஏற்றி விசேஷ பிரார்த்தனை செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்