முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெக்கான் சார்ஜர்ஸ் அணியை நீக்கியது பி.சி.சி.ஐ.

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

மும்பை, அக். 14 - ரூ. 100 கோடிக்கான வங்கி உத்தரவாதம் அளிக்க தவறியதை அடுத்து டெக்கான் அணியை ஐ.பி.எல். போட்டியில் இருந்து நீக்கியது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இதனிடையே மும்பையை சேர்ந்த கம்ப்ளா லேன்மார்க், ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு டெக்கான் அணியை விற்று விட்டதாக டெக்கான் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்பட்டது என்பது தெரியவில்லை. 2008 ம் ஆண்டு டெக்கான் அணியை டெக்கான் கிரானிக்கல் ஹோல்டிங்ஸ் சுமார் ரூ. 450 கோடிக்கு வாங்கியது. சமீபத்தில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து கொண்டிருந்த டெக்கான் அணியை ஐ.பி.எல். போட்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியது. இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டை டெக்கான் நாடியது. வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. ரூ. 900 கோடிக்கு அணியை வேறு நிறுவனம் ஏலம் எடுக்க வந்த போதும் டெக்கான் நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கிரிக்கெட்வாரியத்தின் சார்பில் அணி நீக்கத்துக்கு காரணம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரூ. 100 கோடி மதிப்பிலான வங்கி உத்தரவாதத்தை கிரிக்கெட் வாரியத்துக்கு அளிக்க வேண்டும் என டெக்கான் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. கடந்த 12 ம் தேதி மாலைக்குள் உத்தரவாத தொகையை அளிக்கவில்லை என்றால் டெக்கான் அணி மீதுகிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் ஐகோர்ட் உறுதி செய்திருந்தது. ஆனால் டெக்கான் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வங்கி உத்தரவாதம் அளிக்கவில்லை. எனவே டெக்கான் சார்ஜஸ் அணியை கிரிக்கெட் வாரியம் நீக்கி விட்டது. இந்த சூழ்நிலையில் கம்லா நிறுவனத்துக்கு டெக்கான் அணி விற்கப்பட்டுள்ளதுசர்ச்சையாகி உள்ளது. மேலும் அவ்வணி வீரர்களுக்கு தவணையாக உள்ள சம்பளத்தை யார் தருவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்