முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., தற்கொலைப் படை தாக்குதலில் 16 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், அக். 15 - பாகிஸ்தானில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.  பாகிஸ்தானின் வட மேற்கில் ஆடம் கெல் என்ற பகுதியில் உள்ள அரசுக்கு ஆதரவான அமைதி குழுவினரின் அலுவலகத்தின் மீது வெடி பொருள்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று மோதியது. அப்போது பயங்கர சப்தத்துடன் கட்டிடம் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். படுகாயமடைந்த 40 க்கும் மேற்பட்டோர் பெஷாவர் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். 

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்த பகுதியில் தலிபான் அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கடந்த 2009 ம் ஆண்டு ராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதால் தலிபான்களின் ஆதிக்கம் குறைந்தது. இந்நிலையில் மீண்டும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago