முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதல் வழக்கு: பாக்., நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், அக். 15 - மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை இஸ்லாமாபாத் ஐகோர்ட் நவம்பர் மாதம் 3 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.  வழக்கை விசாரிக்கும் நீதிபதி சவுத்ரி ஹபீர் உர் ரஹ்மான் உடல்நிலை சரியில்லாததால் வரும் 26 ம் தேதி வரை விடுப்பில் செல்கிறார். இதையடுத்து அவர் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் சவுத்ரி ஜூல்பிகர் அலி தெரிவித்தார். 

கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதி பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக வந்த பயங்கரவாதிகள் மும்பையின் பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் தவிர மற்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக லஸ்கர் இ தொய்பா கமாண்டர் சகியுர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட 7 பாகிஸ்தானியர்கள் மீது ராவல் பிண்டி தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கை துரிதப்படுத்த கோரியும், லக்வி உள்ளிட்ட 7 பேரின் குரல் மாதிரிகளை பதிவு செய்வது தொடர்பாகவும் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago