முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணப்பட்டுவாடா அ.தி.மு.க. வெற்றியை பாதிக்காது - ஜி. ராமகிருஷ்ணன்

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.12 - தேர்தல் ஆணையத்தின் தடையை மீறி தி.மு.க. பணப்பட்டுவாடா செய்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. திருமங்கலம் பார்முலா இந்த தேர்தலில் எடுபடாது என்று மார்க்சிய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார். 

மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் கே.ராஜூ மற்றும் தெற்கு தொகுதி கம்யூனிஸ்டு வேட்பாளர் இரா. அண்ணாதுரை ஆகியோரை ஆதரித்து அவர் மேலும் பேசியதாவது, 

தமிழகத்தில் கடந்த 2006 ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க. வாக்களித்த மக்களை மறந்து விட்டு அவர்களின் நலனை புறக்கணித்து கருணாநிதியின் குடும்பத்தை வலுப்படுத்தவே ஆட்சி அதிகாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும் போது விலைவாசி உயர்வு, சட்டம், ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவை குறித்து பேசாமல் எதிர்க்கட்சியை ஆளும் கட்சியாக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது என்பதை மட்டும் பேசி வருகிறார். தோல்வி பயத்தால் அவர் திரும்ப திரும்ப இதை பேசுகிறார். 

முதல்வர் குடும்பத்தின் அனுமதியில்லாமல் தமிழ் திரைப்படங்களை தற்போது வெளியிட முடிவதில்லை. தமிழகத்தில் பணம் சம்பாதிக்கும் அனைத்து துறைகளிலும் கருணாநிதியின் குடும்பத்தினர்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். திருமங்கலம் பார்முலா தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. வாக்களிப்பு உரிமையை விலை கொடுத்து வாங்கி ஜனநாயக குரல் வளையை நெரிக்கும் தி.மு.க.வின் பார்முலா இந்த தேர்தலில் எடுபடாது. தடையை மீறி பணப்பட்டுவாடா செய்தாலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். 

மதுரையில் தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளனர். முடிந்தவரை கூட்டணி கட்சி தொண்டர்கள் தி.மு.க.வின் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்துங்கள். மதுரையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு மதுரையை சேர்ந்த மத்திய அமைச்சரே முழு காரணம். நடிகர் வடிவேலு, குஷ்பு ஆகியோர் பிரச்சாரம் செய்யும் அளவுக்கு தி.மு.கவின் நிலை மாறியுள்ளது வேதனைக்குரியது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்