Idhayam Matrimony

கோ-கோ போட்டியில் தென்சென்னை அணி முதலிடம்

திங்கட்கிழமை, 15 அக்டோபர் 2012      தமிழகம்
Image Unavailable

தேனி.அக்.15 - தேனி மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையும் தேனி மாவட்ட கோ-கோ கழகமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான கோ-கோ விளையாட்டு போட்டியானது தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மைதானத்தில் நடைபெற்றது.  இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் தென் சென்னை அணி முதலிடமும், வட சென்னை அணி 2-ம் இடமும், கிருஷ்ணகிரி அணியும், கோவை அணியும் மோதியதில் கிருஷ்ணகிரி அணி 3-ம் இடத்தையும் பிடித்தன.அதுபோல பெண்கள் பிரிவில் தர்மபுரி அணி முதலிடமும், தென் சென்னை அணி 2-ம் இடத்தையும், தேனி அணியானது 3-ம் இடத்;தையும் பிடித்தன.  சிறந்த வீரராக வடசென்னை அணி பிரேம்குமாரும், வீராங்கணையாக தர்மபுரி அணி சந்தியாவும் தேர்வு செய்யப்பட்டனர்.  இறுதி நாள் போட்டியினை இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான வைகைச்செல்வன் துவக்கி வைத்தார்.  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவில் தேனி மாவட்ட பாசறை செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், வாழ்த்தி பேசினார்.  பாசறையின் தேனி ஒன்றிய செயலாளர் முத்துபாலாஜி வரவேற்று பேசினார்.  இந்த விழாவில் தமிழக நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வ்ெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.  இந்த விழாவில் மாவட்ட செயலாளர் சிவக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேசன், மாவட்ட ஊராட்சி தலைவர் மகாலிங்கம், துணைத்தலைவர் ஆண்டி, தேனி நகர்மன்ற தலைவர் முருகேசன், துணைதலைவர் காசிமாயன், அண்ணா கூட்டுறவு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பால்பாண்டி, எல்லப்பட்டி முருகன், மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், மாவட்ட மகளிரணியினர், தேனி ஊராட்சி ஒன்றிய தலைவர் அம்சகோமதி, பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்லமுத்து, தேனி நகர்மன்ற உறுப்பினர்கள் வைகை கருப்பு, வீரமணி, ஜெயமணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பாசறை நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.  இறுதியாக விமலேஸ்வரன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்