முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சூப்பர் கிங் லயன்சுடன் இன்று மோதல்

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கேப்டவுன், அக். 16 - சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டியில் கேப்டவுன் நகரில் நடைபெற இருக்கு ம் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லயன்ஸ் அணிகள் மோத உள்ளன. முன்னதாக நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

எனவே லயன்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் கேப்டன் தோனி தலை மையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந் துள்ளது. 

சிட்னி சிக்சர்ஸ்சுக்கு எதிரான போட்டி யில் சென்னை அணியின் பந்து வீச்சு எடுபடவில்லை. எனவே இதனை சரிசெய்து ஆடினால் அந்த அணி வெற்றி பெறலாம். 

அந்தப் போட்டியில் சென்னை அணி இறுதிக் கட்டத்தில் அதிகமான ரன்களை விட்டுக் கொடுத்தது. கேப்டன் தோ னி பயன்படுத்திய பெளலர்களை சிட்னி அணியினர் நார் நாராக கிழித்து எடு த்தனர். 

எனவே இன்றைய ஆட்டத்தில் சென் னை அணியின் முன்னணி பந்து வீச்சா ளர்களான பென் ஹில்பென்ஹாஸ் மற்றும் டக் பொலிஞ்சர் இருவரும் தங் களது திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. 

தவிர, இடது கை சுழற் பந்து வீச்சாள ரான ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வி ன் இருவரும் அந்தப் போட்டியில் சிற ப்பாக பந்து வீசினர். ஆனால் கடைசி 6 ஓவரில் சென்னை அணி அதிக ரன்னை கொடுத்தது. இதுவே தோல்விக்கு கார ணமாக அமைந்தது. 

சென்னை அணி மேலும் ஒரு தோல்வி அடைந்தால் அதன் அரை இறுதி வாய்ப்பு இழுபறியாகிவிடும். இதனால் கடைசி 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது. 

லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை வீரர் மகேஷ் ஒரு ஓவரில் 18 ரன்னை அள்ளிக் கொடுத்தார். எனவே அவருக்குப் பதிலாக வேறு வீரரை இற க்குவது குறித்து கேப்டன் தோனி ஆலோசித்து வருகிறார். 

லயன்ஸ் அணி முதல் லீக்கில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை சந்தித்தது. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் லயன்ஸ் வெற்றி பெற்றது. 

மும்பை அணிக்கு எதிரான இந்த லீக்கி ல் லயன்ஸ் அணி தரப்பில் மூத்த வீரரா  ன மெக்கன்சி மற்றும் டிகாக் இருவரும் பேட்டிங்கில் கலக்கினர். 

மற்ற பேட்ஸ்மேன்கள் இன்றைய ஆட்டத்தில் பிரகாசிக்க காத்திருக்கின்றனர். முதல் ஆட்டத்தில் அந்த அணியின் பந் து வீச்சு சிறப்பாக இருந்தது. முக்கிய மாக வேகப் பந்து வீச்சாளர் டிர்க் நான் ஸ் வெகு நேர்த்தியாக பந்து வீசினார். 

இடது கை வேகப் பந்து வீச்சாளரான நான்ஸ் 15 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். ஒட்டு மொத்தத்தில் கிறி ஸ் மோரிஸ் தவிர, மற்ற பெளலர்கள் தங்களது பங்களிப்பை நன்றாக செய்த னர். 

சிட்னி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை வீரரான சுரேஷ் ரெய்னா நன்றாக பேட்டிங் செய்து அணிக்கு நம்பிக் கையை அளித்தது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் லயன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் முரளி விஜய், பத்ரிநாத் மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் தங்களது பேட்டிங் திறனை நிரூபிக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்