முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லயன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் மு.இ.,-சை வீழ்த்தியது

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஜோகன்ஸ்பர்க், அக். 16 - சாம்பியன்ஸ் லீக் டி - 20 கிரிக்கெட் போட்டியில் ஜோகன்ஸ்பர்க்கில் நடை பெற்ற ஆட்டத்தில் லயன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந் தியன்ஸ் அணியை வீழ்த்தியது. ஜோகன்ஸ்பர்க் நகரில் உள்ள நியூ வா ன்டரர்ஸ் மைதானத்தில் குரூப் பி பிரி வைச் சேர்ந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் லயன்ஸ் அணிகள் மோதின. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெ ற்ற லயன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில், டி.ஸ்மித் மற்றும் டெண்டுல் கர் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்னை எடுத்தது. இதில் ஒரு வீரர் கூட அரை சதத்தை தாண்டவில்லை. 

எம். ஜான்சன் அதிகபட்சமாக 29 பந்தி ல் 30 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். தவிர, ரோகித் சர்மா 27 பந்தி ல் 27 ரன்னையும், டி.ஸ்மித் 19 பந்தில் 26 ரன்னையும், திணேஷ் கார்த்திக் 19 ரன்னையும், டெண்டுல்கர் 16 ரன்னையும், பொல்லார்டு 11 ரன்னையும் எடு த்தனர். 

லயன்ஸ் அணி சார்பில், சோகைல் தன் வீர் 31 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். தவிர, மோரிஸ், நான்ஸ், மற்றும் பாங்கிசோ ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

லயன்ஸ் அணி 158 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை மும் பை இந்தியன்ஸ் அணி வைத்தது. அடுத் து களம் இறங்கிய அந்த அணி 18.5 ஓவ ரில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த லீக் ஆட்டத்தில் பீட்டர் சென் தலைமையிலான லயன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெ ற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 4 புள்ளிகள் கிடைத்தது. 

லயன்ஸ் அணி தரப்பில், மெக்கன்சி மற்றும் டிகாக் இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அணியை வெ ற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 

மெக்கன்சி அதிகபட்சமாக, 41 பந்தில் 68 ரன்னை எடுத்தார். இதில் 12 பவுண்டரி அடக்கம். டிகாக் 33 பந்தில் 51 ரன் னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி மற் றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, கேப்டன் பீட்டர்சென் 14 ரன்னையும், போடி 19 ரன்னையும் எடுத்தனர். 

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சு இந்தப் போட்டியில் எடுபடவில் லை. மலிங்கா 18 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். ஹர்பஜன் சிங் 36 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத் தார். மெக்கன்சி இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்