முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலாஸ்கா விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி

புதன்கிழமை, 17 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

 

அலாஸ்கா, அக். 17 - அமெரிக்காவின் அலாஸ்கா மகாணத்தில் உள்ள விமானநிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுந்த வதந்தியை அடுத்து அங்கு பதட்டம் உருவானது. அங்குள்ள டெட் ஸ்டீவன்ஸ் ஆங்கோரேஜ் சர்வதேச விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் விமானத்தில் பயணம் செய்வதற்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு பயணியின் பேக்கில் வெடி குண்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு அருகேயுள்ள விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். பயணிகள் கொண்டு வந்திருந்த லக்கேஜ்கள் முழுமையாக சோதனைக்குட்படுத்தப்பட்டன. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனையடுத்து வெடிகுண்டு இருப்பதாக கூறியது வெறும் புரளிதான் என்று தெரியவந்தது.

இதன் பின்னரே டெட் ஸ்டீவன்ஸ் ஆங்கோரேஜ் விமானநிலையத்தில் விமானங்கள் தரை இறங்க அனுமதிக்கப்பட்டன. இருப்பினும் விமானங்களில் பயணிகள் ஏற தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு வதந்தி தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்