முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தனித்து போட்டி

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

மதுரா,ஏப்.12 - உத்திரப்பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும். எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாது என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்துல் மேனன் தெரிவித்துள்ளார். 

கடந்த லோக்சபை தேர்தலின்போது உத்திரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. இதில் காங்கிரஸ் 22 லோக்சபை தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியை நினைத்து பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. ஆனால் அங்கு படுதோல்வி ஏற்பட்டது. இந்த படுதோல்வி ஏற்பட்டாலும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் எந்த கட்சியுடனும் சேர்ந்து கூட்டணி அமைக்காது தனித்தே போட்டியிடும் என்று அப்துல் மேனன் நேற்று மதுராவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். 

வகுப்புவாத சக்திகளை எதிர்த்து போராடுவதுதான் காங்கிரசின் முக்கிய பணி. மாநிலத்தில் வகுப்புவாதம் பலவீனமடைந்துவிட்டாலும் இன்னும் வளர்ச்சி பணிகளுக்கு வகுப்புவாதம் தடையாக இருக்கிறது. சாதியை வைத்து அரசியல் நடத்துவது பேராபாத்தாகும். வரும் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்கட்டமைப்புகளை பெருக்க மத்திய அரசு ஒதுக்கிய நிதி இன்னும் அப்படியே பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கிறது என்றும் மாயாவதி அரசு மீது மேனன் கடுமையாக குற்றஞ்சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!