முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதக்கங்களை வென்ற இந்திய டாக்டருக்கு ஜனாதிபதி பாராட்டு

புதன்கிழமை, 17 அக்டோபர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக். 17 - துருக்கியில் நடைபெற்ற உலக மருத்துவம் மற்றும் சுகாதார விளையாட்டு போட்டிகளில் 7 பதக்கங்களை வென்ற இந்திய டாக்டர் சுரேந்திர பூனியாவிற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்தார். 

துருக்கியில் 33 வது உலக மருத்துவம் மற்றும் சுகாதார விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்கில் இடம்பெற்ற 22 போட்டிகள் நடத்தப்பட்டது. 47 நாடுகளை சேர்ந்த 2,300 க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்தியாவை சேர்ந்த மேஜர் டாக்டர் சுரேந்திர பூனியா பங்கேற்று பவர் லீப்டிங் போட்டி மற்றும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டிகளில் கலந்து கொண்டு தலா 1 தங்கப் பதக்கம் வென்றார். மேலும் 400, 1,500, 5 ஆயிரம் மீட்டர் கிராஸ் கன்ட்ரி ஓட்டம் மற்றும் பென்டதலான் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்ட பூனியா 5 வெள்ளிப்பதக்கங்களை வென்றார்.

இவரது விளையாட்டு திறனை பாராட்டும் வகையில், ஜனாதிபதி மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பூனியாவை, ஜனாதிபதி பாராட்டி கவுரவித்ததாக, ஜனாதிபதி மாளிகை செய்தியாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி  மாளிகையின் பாதுக்காவல் படையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வரும் பூனியா, 3 வது முறையாக சர்வதேச அளவிலான போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். கடந்த ஆண்டு லாஸ் பால்மஸ் மற்றும் ஸ்பெயினில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றார்.

அவரது விளையாட்டுத் திறனை பாராட்டி இந்த ஆண்டுக்கான விஷிஷ்த் சேவா பதக்கத்தை ஜனாதிபதி வழங்கினார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜ்புரா என்ற கிராமத்தை சேர்ந்த பூனியா, புனேயில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்