முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ஆதீனமாக நித்தியை நியமித்தது செல்லாது என வாதம்

வியாழக்கிழமை, 18 அக்டோபர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, அக். 18 - மதுரை ஆதீனத்தின் இளைய சன்னிதானமாக நித்யானந்தாவை நியமித்து தற்போதைய ஆதீனம் அருணகிரிநாதர் வெளியிட்ட அறிவிப்பு சட்டப்படி செல்லாது என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. 

நித்யானந்தா நியமனத்தை எதிர்த்து வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, மதுரையை சேர்ந்த ஜெகதலபிரதாபன், கவுதம் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் பானுமதி, சுப்பையா ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், மதுரை ஆதீனத்தின் தலைமை பொறுப்பில் ஒருவர் மட்டுமே இருக்க முடியும். தற்போதைய ஆதீனகர்த்தரின் காலத்துக்குப் பின் அந்த பொறுப்புக்கு காலியிடம் ஏற்பட்டால் மட்டுமே இந்து சமய அறநிலைய துறை விதிகளின்படி அடுத்த சன்னிதானத்தை நியமனம் செய்ய முடியும் என்றார். 

மேலும் மதுரை ஆதீனத்தின் தலைமை பொறுப்புக்கு ஒருவரை நியமிப்பதற்கென ஏராளமான நெறிமுறைகள் உள்ளன. ஆனால் அந்த நெறிமுறைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவரானநித்யானந்தாவை இளைய சன்னிதானமாக நியமித்து அருணகிரிநாதர் அறிவித்துள்ளது சட்டப்படி செல்லாது. நித்யானந்தா மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே தார்மீக அடிப்படையிலும் கூட எந்த மத அமைப்பின் தலைவராகவும் செயல்படும் தகுதி நித்யானந்தாவுக்கு இல்லை என்றார். அதை தொடர்ந்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்