முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லயன்ஸ் - சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது

வியாழக்கிழமை, 18 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கேப்டவுன், அக். 18 - சாம்பியன்ஸ் லீக் டி - 20 கிரிக்கெட் போட்டியில் கேப்டவுன் நகரில் நடை பெற்ற லீக் ஆட்டத்தில் ஹைவெல்ட் லயன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத் தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது. கேப்டவுன் நகரில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் குரூப் பி யைச் சேர்ந் த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைவெல்ட் லயன்ஸ் அணிகள் மோ தின. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி தரப்பில், விஜ ய் மற்றும் டூபிளீசஸ் இருவரும் ஆட்டத் தை துவக்கினர். 

முதலில் களம் இறங்கிய சென்னை அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் னை எடுத்தது. 

கேப்டன் தோனி அதிகபட்சமாக, 26 பந்தில் 34 ரன் எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, டூபிளிசிஸ் 20 பந்தில் 25 ரன்னையும், விஜய் 25 பந்தில் 22 ரன்னையும், ரெய் னா 15 பந்தில் 20 ரன்னையும், ஜடேஜா 16 பந்தில் 21 ரன்னையும், பத்ரிநாத் 14 பந்தில் 27 ரன்னையும் எடுத்தனர். 

லயன்ஸ் அணி சார்பில் பாங்கிசோ 19 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். தவிர, சோகைல் தன்வீர், நான்ஸ், மோரிஸ் மற்றும் புருன் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

லயன்ஸ் அணி 159 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை செ ன்னை அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்னை எடுத் தது. 

ஹைவெல்ட் அணி தரப்பில், ஜி. பொ டி அதிரடியாக ஆடி அரை சதம் அடித் தார். அவர் 46 பந்தில் 64 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அட க்கம். சைம்ஸ் 23 பந்தில் 39 ரன் எடுத் தார். தவிர, மெக்கன்சி 34 பந்தில் 32 ரன் னையும், மோரிஸ் 12 ரன்னையும் எடுத் தனர். 

சென்னை அணி சார்பில், பொலிஞ்சர் 18 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். தவிர, மார்கெல் மற்றும் அஸ்வி ன் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்த னர். இந்தப் போட்டியின் ஆட்டநாயக னாக பாங்கிசோ தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்