முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு தேவையான யுரேனியத்தை ஆஸி., வழங்கும்

வியாழக்கிழமை, 18 அக்டோபர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக். 18 - அணு உலைக்கு தேவையான யுரேனியத்தை இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா வழங்கும் என்று மத்திய தொழில் வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் ஷர்மா நம்பிக்கையுடன் தெரிவித்தார். 

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதில் மத்திய அமைச்சர் ஆனந்த் ஷர்மா மற்றும் இந்திய தொழிலதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் ஷர்மா, ஆஸ்திரேலியாவில் யுரேனியம், தங்கம் உள்ளிட்ட ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. இந்திய தொழில் துறையின் வளர்ச்சிக்காக அவற்றை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார். 

இந்தியாவின் அணு மின் உற்பத்தியை 2030 ம் ஆண்டில் 60 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை எட்ட அணு உலைக்கு தேவையான யுரேனியத்தை ஆஸ்திரேலியா வழங்கும் என்று நம்புகிறோம் என்றார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா, இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க மாட்டோம் என்ற கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளோம். இருப்பினும் ஒருங்கிணைந்த அணுசக்தி ஒத்துழைப்பு நடவடிக்கையின் படியே யுரேனியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago