முக்கிய செய்திகள்

காஷ்மீரில் 3-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      இந்தியா
Kashmir

 

ஸ்ரீநகர், ஏப்.12 - காஷ்மீர் மாநிலத்தில் நேற்று 3-வது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.காஷ்மீர் மாநிலத்தில் ஜமாத் இ அஹ்லி  என்ற அமைப்பின் தலைவர் ஒருவர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றில் கொல்லப்பட்டார். 

இவரது கொலைக்கு கண்டனம் தெரிவித்து ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி சார்பில் கடந்த  2 நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில்  பொது வேலை நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த 2 நாட்களாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 3-வது நாளாக குரியத் மாநாட்டு கட்சியினர் வேறு ஒரு காரணத்திற்காக பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

ஜம்மு பிராந்தியத்தில் வசிப்பவர்களுக்கு டோக்ரா சான்றிதழ் வழங்க காஷ்மீர் அரசு உத்தரவிட்டிருப்பதற்கு  எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இந்த அழைப்பிற்கிணங்க,  கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், பெட்ரோல் பங்குகள், தனியார் அலுவலகங்கள் ஆகியவை அடைக்கப்பட்டிருந்தன.

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இருந்தாலும் போக்குவரத்து சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.

சில இடங்களில் அரசு போக்குவரத்து வாகனங்கள் மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள்  ஓடின.

டோக்ரா சான்றிதழ் வழங்கும் உத்தரவை உடனடியாக மாநில அரசு வாபஸ் பெற வேண்டும் என்று  குரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் கிலானி வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: