முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வினரால் தேமுதிக நிர்வாகி அடித்துப் படுகொலை

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

தருமபுரி ஏப்ரல்​12 - தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியில் திமுக வேட்பாளர் இன்பசேகரனுக்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த திமுகவினரை தடுக்க முயன்ற தேமுதிக நிர்வாகி அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  தருமபுரி மாவட்டம் முழுவதுமே பெரும் சோகத்தையும்  பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

தோல்வி பயத்தால் ஆளும் திமுகவினர் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக தமிழகமெங்கும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் போன்றவற்றை கொடுத்து வருகின்றனர்.

பல்வேறு மாவட்டங்களில் எதிர்க்கட்சியினரை மிரட்டி, போலீஸ் பாதுகாப்புடன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். பல

இடங்களில் வாக்காளர்கள் திமுகவினர் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த போது, அவர்களை மிரட்டி வலுக்கட்டாயமாக பணம் கொடுத்துச் சென்றனர். இவ்வாறு திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு வாக்காளர்களை மிரட்டி பணம் கொடுக்கும் சம்பவங்கள் குறித்து

அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்காத நிலையே nullடிக்கிறது.

மேலும் புகார் கொடுத்த எதிர்கட்சிகளை போலீசார் மிரட்டி வருவதாக எதிர்கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பணம் கொடுக்க  முயன்ற திமுகவினரை தடுத்து நிறுத்திய தேமுதிக நிர்வாகி அசோகனை அந்த ரவுடி கும்பல் சுற்றிவளைத்து  அடித்து படுகொலை செய்யப்பட்ட பயங்கரம் அரங்கேறியுள்ளது.

 தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட

பருவதனஅள்ளியைச் சேர்ந்தவர் அசோகன் (32)., இவர் தேமுதிக கிளைச் செயலாளராக உள்ளார்.

இவரது வீட்டிற்கு அருகே வசித்து வருபவர் சேகர் (31). இவர் திமுக பிரதிநிதியாக உள்ளார். தேர்தல் பணி தொடர்பாக ஏற்கனவே இருவருக்கும் இடையே தகராறு, முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வாக்காளர்களுக்கு திமுக பிரதிநிதி சேகர் மற்றும்

திமுகவினர் பணம் கொடுப்பதாக தகவலறிந்த அசோகன், பணம் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் எனக் கூறியதாக தெரிகிறது. அப்போது இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சேகர்அசோகனை அடித்து கீழே தள்ளியுள்ளார்.

அப்போது தலையில் பலத்த அடிப்பட்ட அசோகன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு

செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக நேற்று அதிகாலை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேமுதிக,அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இறந்த அசோகன் உடலை பிரேதப் பரிசோதனைக்கு பின்பு நேற்று மாலை 4 மணிக்கு மேல் தேமுதிக மாவட்ட செயலாளர் டாக்டர்

இளங்கோவன் தலைமையில் பென்னாகரம் கொண்டுவரப்பட்டது. பென்னாகரம் நான்கு ரோட்டில் இருந்து பருவதனஅள்ளி வரை அசோகன் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அதிமுக,

தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சி தொணடர்கள், திமுக வேட்பாளர் இன்பசேகரன் மற்றும் திமுகவிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த அதிமுக கூட்டணி தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் கேட்டுக்கொண்டதன்பேரில் சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் அசோகனின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊராக பருவதனஅள்ளியில்

நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் மூத்த நிர்வாகி எம்.எல்.ஏ. மகேந்திரன், அதிமுக மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன், தேமுதிக மாவட்ட செயலாளர் டாக்டர். இளங்கோவன், பென்னாகரம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் நஞ்சப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள்

அசோகனின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

தேமுதிக நிர்வாகி படுகொலைக்கு திமுக முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அலட்சியப் போக்கை கடைபிடித்து வருவதுடன், மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் திமுகவினர் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அராஜகம்

செய்துவருவதை பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது அப்பாவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது வேதனையளிப்பதாக தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகளை விதித்ததுடன், அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் பெரும்பாலான இடங்களில் தேர்தல் ஆணைய

கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் மீறி திமுகவினர் பணம் கொடுக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறை தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை நடுநிலையாக பின்பற்றியிருந்தால் இந்த கொலைச் சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதே நிதர்சனமான உண்மை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis