முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதீனமடத்தை ஒப்படைக்க கோரிய மனு விசாரணை தள்ளிவைப்பு

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,அக்.20 - மதுரை ஆதீனமடத்தை அரசிடம் ஒப்படைக்க கோரிய மனு விசாரணையை வருகிற 29ம்தேதிக்கு தள்ளி வைத்து கோர்ட் உத்தரவிட்டது. அறநிலையத்துறை ஆணையர் பி.தனபால் மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அருணகிரிநாதரும், நித்யாவும் இணைந்து கடந்த ஏப்23ம் தேதி மதுரை ஆதீனம் டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை மதுரை(தெற்கு) சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். ஆதீனமடாதிபதியாக இருக்கும் ஒருவர் அறக்கட்டளை துவங்குவது அறநிலையத்துறை விதிகளுக்கு முரணானது. அறக்கட்டளை மூலம்ஆதீன சொத்துக்களை அபகரிக்க வாய்ப்புள்ளதால் அதன் பதிவை செல்லாததாக அறிவிக்க வேண்டும். மடத்தின் சொத்துக்களை விற்கும் போதும், ஒப்பந்ததத்திற்கு விடும் போது அரசின் ஒப்பதல் பெற வேண்டும். அதை மீறி 1995அக் 11ல் 7.36 ஏக்கர் நிலத்தை குறைந்த விலையான ரூ.44 ஆயிரத்திற்கு விற்றுள்ளார். மற்றொரு சொத்தை 1999ல் விற்றுள்ளார். அதன் மூலம் மடாதிபதியாக இருக்க தவறிவிட்டார். விதிமுறைகளாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் செய்ய வேண்டிய பூஜையில் இருந்து அருணகிரிநாதர் தவறிவிட்டார். எனவே ஆதீன நிர்வாகத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

   இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி குருவையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு வக்கீல் தமிழ்செல்வன் வாதிடும் போது, மதுரை ஆதீனமடத்தின் 292வது ஆதீனம்  அருணகிரிநாதர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்தது செல்லாது. மேலும் அறக்கட்டளை ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அதை நடைமுறைபடுத்தக்கூடாது. மற்றும் அதை சார்ந்த பிரமாண (அபிடவிட்) பத்திங்களை நடைமுறைப்படுத்தக்கூடாது. மேற்கண்ட காரணங்களால் மதுரை ஆதீனத்தை நிர்வகிக்க அருணகிரிநாதருக்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் இவ்வாறு அவர் வாதிட்டார். இதை தொடர்ந்து அருணகிரிநாதர்சார்பில் ஆஜரான வக்கீல் நாகேந்திரன் பதில் மனு தாக்கல் செய்ய தங்களுக்கு கால அவகாசம் வேண்டும். வழக்கு தொடர்பான ஆவணங்களை தர உத்தரவிடவேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த அரசு வக்கீல் இன்று கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மதுரை ஆதீன மடத்தில் இருந்து பெறப்பட்டதுதான். எனவே இந்த ஆவணங்கள் அவர்களிடம் உள்ளது என்றார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 29ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி குருவையா உத்தரவிட்டார். அன்று மதுரை அருணகிரிநாதர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்