முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் லீக்: டெல்லி - பெர்த் அணிகள் இன்று பலப்பரிட்சை

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கேப்டவுன், அக். 21 - சாம்பியன்ஸ் லீக் டி - 20 கிரிக்கெட் போட்டியில் கேப்டவுனில் இன்று நட க்க இருக்கும் ஆட்டத்தில் டெல்லி டே ர்டெவில்ஸ் மற்றும் பெர்த் ஸ்கோர்ச்சர் ஸ் அணிகள் மோத உள்ளன. 

டெல்லி அணியில் நட்சத்திர வீரர்கள் அதிகம் உள்ளனர். எனவே பெர்த் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எளிதான வெற்றி வா   ய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

டெல்லி அணி தற்போதைய நிலையில் புள்ளிகள் தரப்பட்டியலில் 2- வது இட த்தில் உள்ளது. எனவே அந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

டெல்லி அணி தனது முதல் லீக் ஆட்ட த்தில் வெற்றி பெற்றது. ஆனால் ஆக் லாந்து அணிக்கு எதிரான 2-வது போட்டியின் போது, மழை குறுக்கிட்டதால் அந்த அணி வீரர்கள் ஏமாற்றம் அடைந் தனர். 

பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் கடைசியில் உள்ளது. கடைசி போட்டி மழையால் கைவிடப் பட்டதால் அந்த அணிக்கு 2 புள்ளி கிடைத்தது. 

எனவே பெர்த் அணி தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் இன்றைய  போட்டி யில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

டெல்லி அணி தனது முதல் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தோற்கடித்தது. இந்தப் போட்டியில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப் பாக ஆடாவிட்டாலும், பெளலர்கள் நன்கு பந்து வீசி அணிக்கு வெற்றி தே டித் தந்தனர். 

டெல்லி அணியில் கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே, டேவிட் வார்னர்,வீரேந் தர் சேவாக், ரோஸ் டெய்லர் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகிய நட்சத்திர பே ட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் மேட்ச் வின்னர்களாவர். மேற்படி முன்னணி வீரர்களுக்கு ஆதர வாக இளம் வீரரான உன்முக்த் சந்த் இருக்கிறார். எனவே டெல்லி அணியி ல் 5 முன்னணி வீரர்கள் உள்ளனர். அந்த அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. 

டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். இத னால் எதிரணி வீரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். முக்கியமாக மார்னே மார் கெல் பந்துகளை எகிறும் வகையிலும், சூழ்நிலைக்கு தகுந்தவாறு பந்து வீசுவ திலும் தேர்ச்சி பெற்றவர். 

இர்பான் பதான் முன்பு போல மீண்டு ம் சிறப்பாக பந்து வீசி வருகிறார். தவி ர, இளம் வீரரான உமேஷ் யாதவும் தெ ன் ஆப்பிரிக்கா மைதானங்களுக்கு தகு ந்தவாறு நேர்த்தியாக பந்து வீசி வருகிறார். 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணியைப் பொறுத்த வரை, அந்த அணி முதல் வரிசை பேட்ஸ்மேன்களையே ஸ்கோருக்கு நம்பி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்