முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சினுக்கு விருது: மேத்யூ ஹைடன் கொதிப்பு

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

மெல்பார்ன், அக். 22 - இந்திய வீரர் சச்சினுக்கு ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த ஆடர் ஆப் ஆஸ்திரேலியா பதவி அளிக்கப்பட்டதற்கு, முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ ஹைடன் அதிருப்தி தெரிவித்துள்ளார். சச்சினுக்கு ஆஸ்திரேலியாவின் பிரதமர் பதவியே அளிக்கலாம் என்று கோபத்தில் ஹைடன் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்(39). கடந்த 23 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் ஆடி வரும் அவர், பல சாதனைகளை படைத்துள்ளார். இந்த நிலையில் இவரது சாதனைகளை பாராட்டி, ஆஸ்திரேலிய நாட்டின் உயர்ந்த பதவியான ஆடர் ஆப் ஆஸ்திரேலியா உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

பெரும்பாலும் ஆஸ்திரேலிய குடிமகன்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த பதவி, இந்தியரான சச்சினுக்கு வழங்கப்பட்டதற்கு, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடனும் சேர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரேடியா நிகழ்ச்சி ஒன்றிற்கு ஹைடன் பேட்டி அளித்தார். 

அப்போது அவர், சச்சினுக்கு அளிக்கப்பட்ட பதவியை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து மேத்யூ ஹைடன் கூறியதாவது,

என்னை பொறுத்த வரை ஆடர் ஆப் ஆஸ்திரேலியா உறுப்பினர் பதவி ஆஸ்திரேலியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். ஆனால் தற்போது வெளிநாட்டவருக்கு வழங்கப்பட்டதால், ஆஸ்திரேலிய மக்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சச்சின் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை நான் ஒப்பு கொள்கிறேன். அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருவதாக இருந்தால், நாட்டின் பிரதமர் பதவி கூட அவருக்கு அளிக்கலாம். அதில் தவறு இல்லை. ஆனால் அவர் தற்போது இந்தியாவில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சச்சினுக்கு அப்பதவி அளிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்