முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லயன்ஸ் அணி அரை இறுதிக்கு முன்னேற்றம்

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஜோகன்ஸ்பர்க், அக். 22 - சாம்பியன்ஸ் லீக் டி - 20 கிரிக்கெட் போட்டியில் ஹைவெல்ட் லயன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் யார் க்ஷயர் அணியை வீழ்த்தி அரை இறுதி க்கு முன்னேறியது. குரூப் பிரிவில் ஏற்கனவே சிட்னி சிக்ச ர்ஸ் அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இதனைத் தொடர்ந்து 2 -வது அணியாக லயன்ஸ் அணி முன்னேறியுள்ளது. 

இந்தப் பிரிவில் லயன்ஸ் அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றதால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்திய ன்ஸ் ஆகிய அணிகள் அரை இறுதி வா  ய்ப்பை இழந்தன. 

சாம்பியன்ஸ் லீக்கில் ஜோகன்ஸ்பர்க் நகரில் உள்ள நியூ வான்டரர்ஸ் மைதா  னத்தில் குரூப் பி பிரிவு ஆட்டம் நடந்த து. இதில் ஹைவெல்ட் லயன்ஸ் மற்று ம் யார்க்ஷயர் அணிகள் மோதின. முன்னதாக இந்தப் போட்டியில் டாசி ல் வெற்றி பெற்ற லயன்ஸ் அணி பீல்டி ங்கை தேர்வு செய்தது. யார்க்ஷயர் அணி சார்பில், ஜாக்ஸ் மற்றும் ரூட் இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.

ஆனால் முதலில் களம் இறங்கிய அந்த அணி ரன் எடுக்க தடுமாறியது. யார்க் ஷயர் அணி இறுதியில் நிர்ணயிக்கப் ப ட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற் கு 131 ரன்னை எடுத்தது.  

அந்த அணி தரப்பில், துவக்க வீரர் ஜா க்ஸ் அதிகபட்சமாக, 29 பந்தில் 31 ரன் னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி அட க்கம். கேப்டன் கேல் 26 பந்தில் 21 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்க ம். தவிர, லித் 17 பந்தில் 21 ரன்னையும், பேலன்ஸ் 16 பந்தில் 17 ரன்னையும், ஹாட்க்சன் 10 ரன்னையும் எடுத்தனர். 

லயன்ஸ் அணி சார்பில், பாங்கிசோ 23 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். தவிர, பீட்டர்சன், மோரிஸ் மற்று ம் பிரீட்டோரிஸ் தலா 1 விக்கெட் எடு த்தனர். 

லயன்ஸ் அணி 132 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை யா ர்க்ஷயர் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன் எடுத்தது. 

இதனால் இந்த லீக் ஆட்டத்தில் லயன் ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. 

லயன்ஸ் அணி தரப்பில், டிகாக் 35 பந்தி ல் 32 ரன் எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். சைம்ஸ் 22 பந்தில் 27 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, பிரிடோரியஸ் 14 பந்தில் 25 ரன்னையு ம், மெக்கன்சி 13 ரன்னையும், கேப்டன் பீட்டர்சென் 19 ரன்னையும் எடுத்தனர். 

யார்க்ஷயர் அணி சார்பில் பேட்டர்சன் 21 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். தவிர, வார்ட்லா, ஹனான் மற் றும் ரபீக் ஆகியோர் தலா 1 விக்கெட்எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக சைம்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago