முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செ., சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் வெளியேற்றம்

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஜோகன்ஸ்பர்க், அக். 22 - சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டியில் ஜோகன்ஸ்பர்க நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது. 

சென்னை அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற போதிலும் லயன்ஸ் அணி ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றதால் சென்னை மற்றும் மும்பை அணிகள் இந்தப் போட்டியில் இருந்து வெளியேறற்றப்பட்டன. 

சாம்பியன்ஸ் லீக்கில் ஜோகன்ஸ் பர்க் நகரில் உள்ள நியூ வான்டரர்ஸ் மைதா  னதித்தில் நடந்த ஆட்டத்தில் குரூப் பி பிரிவைச் சேர்ந்த சென்னை சூப்பர் கிங் ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. 

மும்பை இந்தியன்ஸ் அணி முன்னதாக டாசில் வெற்றி பெற்று பீல்டிங்கை தே ர்வு செய்தது. சென்னை அணி சார்பில், விஜய் மற்றும் டூபிளிசெஸ் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

இந்தப் போட்டியில் சென்னை அணி மும்பையின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடி ரன்னைக் குவித்தது. இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்னை எடுத்தது. 

சென்னை அணி தரப்பில், டூபிளிசெஸ் அதிகபட்சமாக, 33 பந்தில் 52 ரன் எடுத் தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்ச ர் அடக்கம். தவிர, விஜய் 25 பந்தில் 36 ரன்னையும், கேப்டன் தோனி 19 பந்தி ல் 35 ரன்னையும், ஜடேஜா 12 ரன்னையும், அஸ்வின் 13 ரன்னையும் எடுத்தனர். 

மும்பை அணி சார்பில், மலிங்கா 32 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத் தார். தவிர, டி. ஸ்மித் மற்றும் ஓஜா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

மும்பை அணி 174 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை செ ன்னை அணி வைத்தது. ஆனால் அடுத் து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரி ல் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்னைஎடுத்தது. 

இதனால் இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்  வித்தியாசத் தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 4 புள்ளிகள் கிடைத்தது. 

மும்பை அணி தரப்பில், திணேஷ் கார் த்திக் அதிகபட்சமாக, 45 பந்தில் 74 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் அடக்கம். தவிர, ரோகித் சர்மா 36 பந்தில் 32 ரன்னையும், பொல்லார்டு 17 பந்தில் 31 ரன்னையும், ஆர். ஸ்மித் 13 ரன்னையும் எடுத்தனர். 

சென்னை அணி சார்பில், ஹில்பென் ஹாஸ் 14 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, மார்கெல், ஜடே ஜா  தலா 2 விக்கெட்டும், டூபிளீசெஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஹில்பென் ஹாஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago