முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரவு நேரங்களில் பணப்பட்டுவாடா - சரத்குமார் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.12 - இரவு நேரத்தில் மின்சாரவெட்டு இருப்பது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாட செய்வதற்கு வாய்ப்பாக இருக்கிறது. அதனால் இரவு நேரத்தில் மின்வெட்டு இருக்கக்கூடாது என்று சரத்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-பள்ளி பொதுத்தேர்வுகளின் போதும், தேர்தல் நேரத்தின் போதும் இரவு நேரங்களில் மின்வெட்டு அறவே இருக்காது என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் நடைமுறையில் அரசு அறிவிப்பிற்கு புறம்பாக, பகல் நேரங்களில் அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு அதிகமாக மின்வெட்டு அமல்படுத்தப்படுவதோடு,  இரவு நேரங்களிலும் மின்வெட்டை அமல்படுத்துவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, நேரம் கடந்தும் பிரச்சாரம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் மீறாமல் இருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இரவு நேரங்களில் மின்வெட்டு நீடித்தால் அது சமூகவிரோத சக்திகளுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு உருவாகும். தேர்தல் பார்வையாளர்களுக்கும், காவல் துறைக்கும்  இருட்டு நேரத்தில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமங்கள் அதிகமாக இருக்கும். நேர்மையான அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், தேர்தல் விதிமுறைகளையும், ஜனநாயக மரபுகளையும் மீறுவோரை இருளில் அடையாளம் கண்டு காவல் துறையிடம்  ஒப்படைப்பது கடினமானதாகவும், சாத்தியமற்றதாகவும் மாறிவிடும். எனவே இரவு நேரங்களில் மின்வெட்டு அறவே இருக்கக்கூடாது என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும், கூட்டணி கட்சிகளின் சார்பில் அரசை வலியுறுத்துகிறேன்.

அரசு அறிவித்திருப்பதை மீறி மேலும் இரவு நேர மின்வேட்டு நீடித்தால், ஆளும் கட்சி வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதற்காகவே ஆளும்கட்சி அரசு  இயந்திரத்தை தனக்கு சாதமாக பயன்படுத்துகிறது. எனவே தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை அளிப்பதோடு, இரவு நேர மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் சரத்குமார் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்