முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி டேர்டெவில்ஸ் அரை இறுதிக்கு தகுதி பெறுமா?

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

செஞ்சுரியன், அக். 23 - சாம்பியன்ஸ் லீக் போட்டியில் செஞ்சு ரியன் மைதானத்தில் இன்று நடக்க இரு க்கும் கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், டைட்டான் ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்த உள்ளன.  டெல்லி அணி அரை இறுதிக்குள் நுழை யுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத் தியில் எழுந்துள்ளது. சாம்பியன்ஸ் லீக் கில் எஞ்சியுள்ள ஒரே அணி இந்த அணிதான். 

ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்ற சாம் பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் லீக்கிலேயே தோல்வி அடைந்து வெளியேற்றப்பட்டு விட்டன. 

இந்நிலையில் கேப்டன் மகிளா ஜெயவ  ர்த்தனே தலைமையிலான டெல்லி டே ர்டெவில்ஸ் அணி இன்று நடக்க இருக் கும் லீக்கில் டைட்டான்ஸ் அணியுடன் மோத உள்ளது. 

டெல்லி அணி கடந்த ஆட்டத்தில் வெ ற்றி பெற்றதன் மூலம் மொத்தம் 10புள் ளிகள் பெற்று குரூப் ஏ பிரிவில் முதலி டத்தில் உள்ளது. டைட்டான்ஸ் அணி 8புள்ளியுடன் 2 -வது இடத்தில் உள்ளது. 

ஆக்லாந்து ஆசஸ் அணி 6 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. எனவே அரை இறுதியில் நுழைய டெல்லி, டைட்டா ன்ஸ் மற்றும் ஆக்லாந்து ஆகிய 3 அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. 

டெல்லி அணிக்கு இந்தப் போட்டியில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருக்கிற து. ஆனால் தென் ஆப்பிரிக்கா அணியான டைட்டான்ஸ் கடும் சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

டெல்லி அணி கடந்த போட்டியில் பெ ர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணியை வென்றது. டைட்டான்ஸ் அணி கடந்த லீக்கில் கொல்கத்தா ரைடர்சிடம் தோற்றது. 

எனவே டெல்லி மற்றும் டைட்டான்ஸ் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறு ம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும், இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில் இறுதிக் கட்ட முடிவு தெரிய வரும். 

கடந்த லீக் போட்டி டெல்லி மற்றும் டைட்டான்ஸ் அணிகளுக்கு வித்தியாச மான அனுபவத்தை அளித்தது. இதில் இரண்டு அணிகளின் தன்னம்பிக்கையும் தகர்ந்தது. 

டெல்லி அணியின் வலுவான பேட்டிங் வரிசையை பெர்த் அணி சோதித்து பார் த்தது. டைட்டான்ஸ் அணியின் இறு மாப்பை கொல்கத்தா தகர்த்தது. 

கடைசி லீக்கில் டெல்லி அணி 122 ரன் னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற சுமாரான இலக்கை பெர்த் அணி வைத்தது. ஆனால் டெல்லி அணி இந்த இலக்கை அடைய தடுமாறியது. 

டெல்லி அணியின் நட்சத்திர வீரர்களா  ன ஜெயவர்த்தனே, பீட்டர்சன், ரோஸ் டெய்லர் மற்றும் உன்முக்த் சந்த் ஆகி யோர் ஓரிலக்க ரன்னிலேயே ஆட்டம் இழந்தனர். 

இதனால் பொறுப்பு அனைத்தும் சே வாக் மீது விழுந்தது. அவரும் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப் பாதை க்கு அழைத்துச் சென்றார். 

34 வயதான சேவாக் அந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார். அவர் ஒரு முனையில் நிலை த்து புத்திசாதுர்யத்துடன் ஆடினார். 

தவிர, ஆல்ரவுண்டர் அஜித் அகார்கரும் இந்தப் போட்டியில் நன்கு ஆடினார். அவர் சேவாக்கிற்கு நல்ல கம்பெனி கொடுத்தார். இருவரும் நேர்மறை அணு குமுறையுடன் ஆடி அணியை இக்கட்  டான நிலையில் இருந்து மீட்டனர். 

பெர்த் அணிக்கு எதிரான இந்த ஆட்டத் தில் அகார்கர் சிக்கனமாக பந்து வீசி னார். அவர் 4 ஓவர்கள் வீசி 14 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இறுதி யில் ஆட்டநாயகன் விருதினையும் பெ ற்றார். 

தென் ஆப்பிரிக்கா வீரரான மார்கெல் இந்தப் போட்டியில் விக்கெட் எதுவும் எடுக்காவிட்டாலும் நன்கு பந்து வீசி னார். இந்தத் தொடரில் அவர் சிறப்பா க பந்து வீசி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்