முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல பாலிவுட் இயக்குனர் யாஷ் சோப்ரா மரணம்

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2012      சினிமா
Image Unavailable

மும்பை, அக். 23 - பழம்பெரும் பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான யாஷ் சோப்ரா மும்பையில் காலமானார். அவருக்கு வயது 80. லாகூரில் பஞ்சாபி குடும்பத்தில் 1932 ல் பிறந்த இவர், பிரபல இயக்குனர் ஜோகர்  மற்றும் தனது சகோதரர் பி.ஆர். சோப்ரா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். சோப்ரா சகோதரர்கள் இணைந்து 1950 மற்றும் 1960 ம் ஆண்டுகளில் பல்வேறு வெற்றிப் படங்களை வழங்கினர். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை சூப்பர் ஸ்டாராக்கிய பெருமை இவரையே சாரும். பல தரப்பட்ட படங்களை யாஷ் சோப்ரா எடுத்திருந்தாலும் அவரது மென்மையான காதல் கதைகளே அவரை பட்டிதொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்தது. சில்சிலா, சாந்தினி தில்வாலே துல்ஹானியா வேஜாயேங்கே போன்ற அவரது காதல் படங்கள் வசூலை வாரிக் குவித்து சூப்பர் டூப்பர் ஹிட்டுகளாயின. அவரது மறைவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தினார் என்று பிரதமர் சோப்ராவுக்கு புகழாராம் சூட்டியுள்ளார். சோப்ரா மறைவுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி மற்றும் பல்வேறு பாலிவுட் கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்