முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி உண்டியல் காணிக்கை 13 கோடி ரூபாய்

புதன்கிழமை, 24 அக்டோபர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, அக்.25  - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. உற்சவம் நடந்த 8 நாள்களில் பக்தர்கள் 12.93 கோடி ரூபாயை உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

திருமலை-திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்க 15-ம்தேதி தொடங்கியது. 9-ம் நாளில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வாருடன் வராக சுவாமி கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டு, ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

 பின்னர் ஏழுமலையான் தெப்பக்குளக்கில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இதையடுத்து நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.  

விழாவில் ஆந்திர மாநில டிஜிபி தினேஷ்ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜூ, செயல் அலுவலர் சுப்பிரமணியம், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ உள்படபலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் செயல் அலுவலர் சுப்பிரமணியம் கூறியதாவது

       பிரம்மோற்சவம் நடந்த கடந்த 8 நாள்களில் 4 லட்சத்து 74 ஆயிரத்து, 888 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கை மட்டும்ரூ.12.93 கோடி. பிரசாதம் மற்றும் ஆர்ஜித டிக்கெட் விற்பனை மூலம் ரூ.2.93 கோடி கிடைத்துள்ளது.17 லட்சத்து 20 ஆயிரத்து 542 லட்டுகள் விற்பனை  செய்யப்பட்டுள்ளன.  3 லட்சத்து 60 ஆயிரத்து 500 பேருக்கு சிறிய லட்டு வழங்கப்பட்டுள்ளது. 2லட்சத்து 

34 ஆயிரத்து500 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.

15 லட்சத்து 23 ஆயிரத்து 758 பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுள்ளது.

 திருமலையைச் சுற்றி 52 இடங்களில் எல் இடி விளக்குகளுடன் கூடிய அலங்கார  வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. இதன்மூலம்15 சதம் மின்சாரம் சேமிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago