முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. வுக்கு வாக்களித்தால் என்னென்ன கிடைக்கும்?

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

 

மதுரை,ஏப்.12 - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 24 ம் தேதி தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதன் மூலம் தமிழக மக்களுக்கு என்னென்ன கிடைக்கும் என்பதை கீழே காணலாம். அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கீழ்க்கண்ட அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

 

* தாய்மார்களுக்கு ஃபேன், மிக்சி, கிரைண்டர் மூன்றும் இலவசம் இது அல்லது அது என்றில்லாமல் மூன்றுமே இலவசமாக தரப்படும்

 

*குடும்ப அட்டைதாரர்களுக்கு பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசம்

 

*கரும்பு கொள்முதல் விலை ஒரு டன்னுக்கு ரூ 2,500 ஆக உயர்த்தப்படும். 

 

* அரசு கரும்பு ஆலைகள் நவீனப்படுத்தப்படும்

 

*விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன வசதி

 

*அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டம்

 

* கிராமங்கள் தோறும் நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும்

 

*தங்கத்தின் விலையை கருத்தில் கொண்டு பெண்களின் திருமாங்கல்யத்திற்கு 

4 கிராம் தங்கம் இலவசம்

 

* நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்

 

* வீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்ட 3 செண்ட் இடம் தரப்படும்

 

* தடையில்லா மின்சார வசதி

 

*சூரிய ஒளி மூலம் இலவச மின்சாரம்

 

* வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தினருக்கு 4 ஆடுகள் இலவசம்

 

* வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் இலவசம்

 

* பள்ளி மாணவர்களுக்கு 4 சீருடைகள், காலணிகள் இலவசம் 

 

* மாணவர்களின் கல்வி உதவித் தொகை ரூ. 5,000 வரை தரப்படும்

 

* பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு லேப்டாப் கணினி இலவசம்

 

* பள்ளி மாணவர்களை பாதுகாக்க படை

 

* மீனவர் பாதுகாப்பு படை

 

* சுய உதவிக் குழுக்களுக்கு ரூ 10 லட்சம் வரை கடன் அதில் 25 சதவீதம் மானியம்

 

* பெண்களுக்கு மகப்பேறு கால சலுகையாக 6 மாதம் விடுமுறை மற்றும் ரூ 12,000 நிதியுதவி

 

* ஊராட்சி ஒன்றிய தலைமையகங்களில் ஆதரவற்ற முதியோர் குழந்தைகளுக்கு 

சிறப்பு தங்கும் விடுதி மற்றும் 3 வேளை உணவு

 

* கேபிள் டி.வி. தொழில் அரசுடமை இதன் மூலம் ஏகபோகம் தடுக்கப்படும்

 

* இளநிலை மற்றும் டிப்ளமோ படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை 

ரூ 50,000 த்துடன் 4 கிராம் தங்கம் இலவசம்

 

* சாதி சான்றிதழ்கள் இனி  பள்ளியிலேயே வழங்கப்படும்

 

* பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை

 

* 60,000 கறவை மாடுகள் இலவசமாக வழங்க நடவடிக்கை

 

* 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு 

செல்ல இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்

 

* தி.மு.க. வினர் பறித்த நிலங்கள் பறிக்கப்பட்டு அவற்றை திருப்பித் தர நடவடிக்கை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்