முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிருபர்களுடன் மோதல்: விஜயகாந்த் மீது வழக்கு

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, அக்.28 -​ சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நிருபர்களுடன் ஆவேசமாக மோதினார். மூத்த பத்திரிகையாளர் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. முருகேசனால் கீழே தள்ளப்பட்டார். 

இதுகுறித்து விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மதுரை செல்வதற்காக நேற்று காலை 10 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவருடன் அவரது  மனைவி பிரேமலதா, அனகை முருகசேன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர். விஜயகாந்த் விமான நிலையம் வருவதை அறிந்ததும் அவரிடம் பேட்டி எடுப்பதற்காக ஏராளமான பத்திரிகை மற்றும் டி.வி நிருபர்கள் கூடி இருந்தனர். அவர் காரை விட்டு இறங்கியதும் நிருபர்கள், தே.மு.தி.க.வைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது பற்றி கருத்து கேட்டனர்.

உடனே ஆவேசம் அடைந்த விஜயகாந்த், நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளது. நாட்டு மக்களுக்கு இதுதான் முக்கியமான பிரச்சினையா? மின்வெட்டு பிரச்சினை இருக்கிறது. டெங்கு காய்ச்சல் இருக்கிறது. அதைப்பற்றி கேளுங்கள் என்றார்.

நிருபர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டதால் விஜயகாந்த் ஆவேசம் அடைந்தார். அப்போது ஒரு நிருபருக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விஜயகாந்துடன் வந்த எம்.எல்.ஏ. அந்த நிருபரை பிடித்து தள்ளினார். இதனால் மேலும் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.

விஜயகாந்த் கடும் கோபத்தில் இருந்தார். அவரை மனைவி பிரேமலதா கையை பிடித்து விமான  நிலையத்துக்குள் அழைத்து சென்றார்.

வழக்கு:

விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நிருபர் விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விஜயகாந்த் மீதும், முருகேசன் எம்.எல்.ஏ மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த் விமான நிலையத்தில் மோசமாக நடந்து கொண்டதற்காக சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago