முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் அணிகள் மொகாலியில் மோதல்

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மொகாலி, ஏப். 13 - இந்தியன் பிரீமியர் லீக் போட்டியி ல் மொகாலியில் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சா ப் கிங்ஸ் லெவன் அணியும் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த முதல் லீக்கில் கொல்கத்தா அணியுடன் மோதியது. பரபரப்பான இந் த ஆட்டத்தில் அந்த அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே இந்த ஆட்டத்திலும் அந்த அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார் ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  

4 -வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தோனி தலைமையி லான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா, கொச்சி, பெங்களூர், ராஜஸ்தான், புனே ஆகிய அணிகளுடன் 2 முறை யும், டெக்கான் , டெல்லி, பஞ்சாப், மும்பை, அணிகளுடன் தலா 1 முறையும் மோத வேண்டும். 

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2 ரன்னில் வென்றது. 2 -வது லீக் ஆட்டத்தில், கில்கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ் சாப் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இன்று மாலை 4 மணிக்கு  மொகாலியில் நடக்கிறது. 

தொடக்க ஆட்டத்தில் சென்னை அணியின் பேட்டிங் சுமாராகவே இருந்தது. முரளி விஜய் சரியாக விளையாடவில்லை. அனிருதா ஸ்ரீகா ந்த், ரெய்னா, அல்பி மார்கெல் நன்றாக ஆடினார்கள். நல்ல நிலையி ல் இருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 - வது வெற்றியை பெறும் நிலையில் உள்ளது. 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதல் ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியி டம் தோற்றது. இதனால் முதல் வெற்றியை பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது. பஞ்சாப் அணியில் நட்சத்திர வீரர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். 

இரு அணிகளும் 7 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்ப ர் கிங்ஸ் 6 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஜெயவர் த்தனே தலைமையிலான கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியும், யுவரா ஜ் சிங் தலைமையிலான புனே வாரியர்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. 

புனே அணி தொடக்க ஆட்டத்தில், பஞ்சாப்பை வென்றது. கொச்சி அணி பெங்களூரிடம் தோற்றது. யுவராஜ் அணி 2 -வது வெற்றி பெறு ம் நிலையிலும், ஜெயவர்த்தனே அணி முதல் வெற்றியைப் பெறும் ஆர்வத்திலும் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்