முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிஸ்பி பதவியையும் இழந்தார் ஹர்பஜன்சிங்

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

டில்லி, அக்.- 29 - இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தில் ஏ கிரேடில் இருந்த ஹர்பஜன் தற்போது பி கிரேடுக்கு மாற்றப்பட்டார். இதனால் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு பதிலாக ரூ.50 லட்சம் மட்டுமே சம்பளமாக பிசிசிஐ வழங்கும். இந்தி சரிவு முடிவதற்கு முன் அடுத்த அதிர்ச்சி ஹர்பஜனுக்கு கிடைத்துள்ளது. ஹர்பஜன் சிறப்பாக விளையாடிய 2002-ம் ஆண்டில் பஞ்சாப் அரசு சார்பில் ரூ.5 லட்சம் பரிசும், வீடு கட்ட ஒரு பிளாட்டும் வழங்கப்பட்டது. பஞ்சாப் போலீஸ் சார்பில் டிஎஸ்பி அந்தஸ்து பதவியும் அளிக்கப்பட்டது. அந்த சமயம் மிகவும் பரபரப்பாக இருந்த ஹர்பஜன் இந்த பதவியை ஏற்றுப்பகொள்ளவில்லை. 10 வருடம் கழித்த தற்போது டிஎஸ்பி பதவியை கேட்டு பஞ்சாப் அரசுக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் காலம் கடந்துவிட்டதால் டிஎஸ்பி பதவி வழங்க முடியாது என்று பஞ்சாப் அரசு அறிவித்துவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்