முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவினர் 10 கோடி ரூபாய் பட்டுவாடா

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி. ஏப்.13 - திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 7தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. இதில் விஜபி தொகுதி என்பது திமுக அமைச்சர் கே.என்.நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு தொகுதியும், மற்றொரு திமுக அமைச்சர் என்.செல்வராஜ் போட்டியிடும் மண்ணச்சநல்லூர் தொகுதியாகும். இதுதவிர தற்போதைய திமுக எம்.எல்.ஏக்களான அன்பில் பெரியசாமி திருச்சி கிழக்கு தொகுதியிலும் கே.என்.சேகரன் திருவெறும்nullர் தொகுதியிலும்,சொந்தரபாண்டியன் லால்குடி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

திருச்சி மேற்கு தொகுதியை பொறுத்தவரை அமைச்சர் கே.என்.நேரு இங்கு போட்டியிடுவதால் வாக்காளர்களுக்கு பணமழை பொழிகிறது. கடந்த ஒருசில மாதங்களுக்கு முன்பே இந்த தொகுதியில் நிச்சயமாக நாம் போட்டியிடுவோம் என தெரிந்து அமைச்சர் நேரு முக்கிய சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்போர் நலசங்கங்களின் நிர்வாகிகளையும் அழைத்து எத்தனை குடும்பங்கள் என கணக்கிட்டு பலகோடி ரூபாயை பட்டுவாடா செய்ததாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுதவிர கடந்த 15 நாட்களாக அமைச்சர் நேரு ஓட்டுக்கேட்க சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் அரத்தி எடுத்தால் அவர்களுக்கு 200ரூபாய் அன்பழிப்பு வழங்கப்பட்டது. இதுதவிர ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கும் ரூ.500 என கணக்கிட்டு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணப்பட்டுவடா செய்யப்பட்டது. இது முதல் ரவுண்டு.

இரண்டாவது ரவுண்டில் மேலும் ரூ.500, ஒவ்வொரு வாக்காளர்களும் கொடுத்தபோதே கைக்கடிகாரம் மூக்குத்தி போன்ற பொருட்களும் வழங்கப்பட்டது. இதுதவிர நேற்று இரவு(செவ்வாய்) திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களிலும் இறுதிக்கட்ட பணப்பட்டுவாடா நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டிலே வாக்காளர்களுக்கு கொடுத்து வைத்த தொகுதி ஒன்று என்றால் அது இந்த தொகுதிதான்.

இதேபோல திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் என்.செல்வராஜ் பணப்பட்டுவாடாவுக்காக தயங்கினார். காரணம். அவர் ஒரு கஞ்சபிசுநாரி என்று அந்த தொகுதி திமுகவினர் சொல்லி சொல்லி சிரித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அமைச்சரோ ஒரேநாளில் தொகுதி முழுவதும் ரூ.200 முதல் 500 வரை தாராளமாக வீசினார். மேலும் கடைசி நாளில் 200 ரூபாய் வழங்கி முடித்தார். 

அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் தமிழகத்தின் மிகபெரிய விஐபி தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆனந்தன் தோற்பது ஒருபுறம் இருந்தாலும் திமுகவினரின் என்னமே ஜெயலலிதா பலஆயிரக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் வேலைபார்த்து ஓட்டுக்கு 500 ரூபாய் வீதம் தொகுதி முழுக்கு 1.50 லட்சம் பேருக்கு பணத்தை இரவோடு இரவாக வாரி இறைத்தனர். ஆகமொத்தம் இந்த தொகுதியில் மட்டும் 10 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது. இந்த பணம் அனைத்துமே அமைச்சர் நேருவின் சொந்தப்பணம்தான். 

திருவெறும்nullர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.என்.சேகரன் படித்தவர்கள் வாழும் பகுதிகளை விட்டுவிட்டு தொகுதி முழுவதும் ரூ.100 முதல் 300 வரை பணம் பட்டுவாடா செய்தாராம். சிலபகுதிகளில் இந்த பணம் போய்சேரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இருப்பினும் சரி செய்யப்பட்டது. 

அமைச்சரின் சொந்த தொகுதியான லால்குடி தொகுதியில் தனக்கு கெளரவ பிரச்சனையாக கருதி திமுக வேட்பாளர் செளந்தரபாண்டியன் மூலம் கடந்த மூன்று நாட்களாக இரவு வேலைகளில் 200 மற்றும் 150 வீதம் தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது. 

இதேபோல துறையூர் (தனி) தொகுதி மக்களுக்கே அடையாளம் தெரியாத திமுக வேட்பாளர் பரிமளாதேவி என்பவர் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பெரும்பாலும் கிராமங்கள் அடங்கி உள்ளது. ஆகவே இங்கு வாக்காளர்களுக்கு ரூ.200 மட்டுமே எல்லா பகுதிகளிலும் வழங்கப்பட்டதாம். ஆகமொத்தம் திருச்சி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் மட்டும் ரூபாய் 20 கோடியை தாண்டலாம் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்