முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் இலாகா பறிக்கப்பட்டதால் விரக்தி அடைந்துள்ள ஜெய்பால்ரெட்டி

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,அக்.- 30 - மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டியிடம் இருந்த பெட்ரோல் இலாகா பறிக்கப்பட்டதால் அவர் பெரும் விரக்தி அடைந்துள்ளார். மத்திய அமைச்சரவை நேற்றுமுன்தினம் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது. புதிதாக 22 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் பல அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டன. மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டியிடம் இருந்த பெட்ரோலிய இலாகா பறிக்கப்பட்டது. அதற்குப்பதிலாக அவருக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெய்பால் ரெட்டி விரக்தி அடைந்துள்ளார். ஜெய்பால் ரெட்டி சரியாக செயல்படாததால்தான் அவரிடம் இருந்து பெட்ரோலிய இலாகா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சரியாக முடிவு எடுக்காமலும், முடிவு எடுப்பதில் தாமதமானதாலும் இயற்கை எரிவாயு மற்றும் ஆயில் துர்ப்பண பணிகள் நின்றுபோய்விட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொழிற்சாலைகள் விவகாரத்தில் பெட்ரோலிய துறை மெத்தனமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. எரிபொருள் துறையில் சீர்திருத்தம் தொடர்பாகவும் அன்னிய நேரடி முதலீடு தொடர்பாகவும் ஜெய்பால் ரெட்டி தாமதப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் மொய்லிக்கு பெட்ரோலிய இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே உள்துறை அமைச்சராக்கப்பட்டபோது வீரப்பமொய்லியிடம் கூடுதலாக எரிசக்தி இலாகாவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்