முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி போட்டியிடும் தொகுதியில் பணம் பட்டுவாடா

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருவாரூர். ஏப்.13 - திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூரில் வாக்காளர்களுக்காக பணப்பட்டுவாடா அதிகளவில் நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. திருவாரூர் நகரில் சாலை வசதி குறைபாடுகள், விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல் இவைகள் எல்லாம் திமுகவுக்கு எதிராக அலைவீசுகிறது. திருவாரூரை பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் உள்ள அதிமுக கம்யூனிஸ்டு, தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு குறிப்பிட்ட சதவீதம் வாக்கு வங்கி உள்ளது. அதேபோல திமுகவை தவிர வேறு எந்த கட்சிக்கும் வாக்கு வங்கி இல்லை. 

இதனால் திருவாரூல் அதிமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் அமோக வெற்றிபெறும் என்றநிலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எங்கு தேர்தலில் தோற்று விடுவோமோ என்ற எண்ணத்தில் திருவாரூர் தொகுதியில் வாக்குக்கு பணப்பட்டுவாடா படு ஜோராக நடைபெற்று வருகிறது. 

ஒரு ஓட்டுக்கு ரூ.500 வீதம் வாக்காளர்களுக்கு கொடுத்ததாக தெரிகிறது. இதை வாங்க மறுக்கும் பொதுமக்கள் வாங்க சொல்லி மிரட்டும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. 

திருவாரூர் தொகுதி மொகந்தனூர், ஆய்குடி ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதை கண்டு கம்யூனிஸ்டு பிரமுகர்கள் அங்கு சென்று பணம் கொடுத்தவர்களை விரட்டினர். இதை வாங்க மறுத்த முத்துமாணிக்கம் என்பவர் மீது ஆயிரம் ரூபாயை வீசி எறிந்துள்ளனர். இதனால் அவர் கொடுத்த புகாரின்பேரில் திமுக நகரசெயலாளர் சங்கர் உள்பட 3 பேர் மீது திருவாரூர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் பணவிநியோகம் திருவாரூரில் எங்கும் நடைபெறா வண்ணம் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கண்விழித்து எச்சரிக்சையாக விழித்துள்ளனர். 

திமுகவின் இந்த பண விநியோகத்தால் நடுநிலை உணர்வுடைய பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கருணாநிதியின் சொந்த தொகுதியான திருவாரூரிலேயே தோற்று விடுவோம் என்ற பயஉணர்வில் திமுக பணபட்டுவாடா செய்யப்படுவதால், அதிமுகவிற்கு வெற்றி அலை வீசுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

திமுக தலைவர் வெற்றிபெறுவதற்கே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது திமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் திமுக தோற்று விடும் என்ற எண்ணம் எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony