முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தை உடனடியாக கலைக்க ஹசாரே வலியுறுத்தல்

புதன்கிழமை, 31 அக்டோபர் 2012      ஊழல்
Image Unavailable

மும்பை, அக். - 31 - பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து விட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, ராணுவ முன்னாள் தலைமை தளபதி வி.கே. சிங் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள் மேலும் கூறியதாவது, பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படுகின்றன. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய அரசு பொதுமக்களின் நலனையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும். ஆனால் இப்போதைய அரசு மக்கள் நலனை மறந்து விட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சரணடைந்து விட்டது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி உள்ளிட்ட விவகாரங்களில் மக்கள் நலனுக்கு எதிராக மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய அரசின் கொள்கைகள் பொதுமக்களுக்கு எந்த பலனையும் அளிக்கவில்லை. மாறாக தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளன. பிரதமர் மன்மோகன்சிங்கும் கூட்டுப் பொறுப்பை ஏற்க தவறி விட்டார்.
சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. இந்த மாற்றத்தில் எதுவுமே உபயோகமாக இல்லை. மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி அவர்களின் கவனத்தை திசை திருப்பவே அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே பாராளுமன்றத்தை கலைத்து விட்டு புதிதாக தேர்தலை நடத்த வேண்டும். அடுத்த மக்களவை தேர்தலில் நேர்மையானவர்களை மட்டுமே ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் ஜனவரி மாதம் 30 ம் தேதி முதல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். ஓராண்டுக்கு இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago