முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறு பரப்பும் ஊடகங்கள் மீதுவழக்கு தொடருவேன்! கட்காரி

புதன்கிழமை, 31 அக்டோபர் 2012      இந்தியா
Image Unavailable

 

நாகபுரி, அக். - 31 - தம் மீது அவதூறு பரப்பும் ஊடகங்கள் மீது வழக்கு தொடரப் போவதாக பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி எச்சரித்துள்ளார். நாகபுரியில் அவரது ஆதரவாளர்களிடையே கட்காரி பேசியதாவது, சில ஊடக நிறுவனங்கள் காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்டாக செயல்படுகின்றன. எனக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தின் பின்னணியில் சில ஊடகங்கள் உள்ளன. அவை காங்கிரசின் கட்டளைப்படி செயல்படுகின்றன. நான் நிரபராதி. எனக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாடம் கற்பிப்பேன். அவதூறு பரப்பும் ஊடக நிறுவனங்கள் மீது வழக்கு தொடருவேன். ஒரு மிகப் பெரிய ஊடக நிறுவனம் லண்டனில் இருந்து மோரீஷஸ் வழியாக கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தது. ரூ. 10 முக மதிப்புள்ள பங்குகளை தலா ரூ. 38 ஆயிரத்துக்கு விற்பனை செய்தது. இது தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. பூர்த்தி நிறுவனத்தில் நான் எந்த உயர் பதவியும் வகிக்கவில்லை. அந்த நிறுவனத்தில் எனக்கு ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பங்குகள் மட்டுமே உள்ளன. நான் சமூக சேவையில் ஈடுபட்டுள்ளேன். இப்பகுதியை சேர்ந்த 12 ஆயிரம் விவசாயிகள் மேற்கண்ட நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். என் மீதான புகார் விஷயத்தில் நான் கடைசி வரை எந்த அச்சமுமின்றி போராடுவேன். எனது நிறுவனங்களில் வருமான வரித் துறை சோதனைகளை நடத்த காங்கிரஸ் ஏற்கனவே உத்தரவிட்டது. எனக்கு வருமானமே இல்லாத போது ஏன் சோதனை நடத்தப்படுகிறது என்று நான் அதிகாரிகளிடம் கேட்டேன். மக்களின் நீதிமன்றத்தில் விசாரணையை சந்திக்கவும் நான் தயார். அரசின் எந்த விசாரணைக்கும் தயாராகவே இருக்கிறேன். நான் மகராஷ்டிர பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த போது ஒப்பந்ததாரர்களுக்கும், கட்டுமான நிறுவனங்களுக்கம் சாதகமாக நடந்து கொண்டதாக புகார் கூறுகின்றனர். ஆனால் நான் எனது பதவியை தவறாக பயன்படுத்தியதில்லை என்றார் கட்காரி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்