முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரராமன் கொலைவழக்கு 5-ந்​-தேதிக்கு தள்ளிவைப்பு

புதன்கிழமை, 31 அக்டோபர் 2012      இந்தியா
Image Unavailable

புதுச்சேரி, அக்.​- 31 - சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை வருகின்ற 5-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இந்த வழக்கில் அப்ரூவர் ரவி சுப்பிரமணியம் பிறழ் சாட்சியம் அளித்ததால் அவரை குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றும், பிறழ் சாட்சியம் அளித்தவர்கள் அனைவரிடமும் மறு விசாரணை நடத்த வேண்டும் என்றும் சங்கரராமனின் மனைவி பத்மா 2 மனுக்கள் அளித்து இருந்தார். இந்த மனுக்கள் மீது விசாரணை நடந்து வந்தது.
மேலும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை புதுவை கோர்ட்டில் நடத்த கூடாது சென்னை ஜகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும் பத்மா ஜகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் புதுவை கோர்ட்டில் நேற்று சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை நடந்தது. விஜயேந்திரர், ரகு, மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட 20 பேர் ஆஜரானார்கள். ஜெயேந்திரர் உள்பட 4 பேர் ஆஜராகவில்லை. சங்கரராமனின் மகன் ஆனந்த் சர்மா ஒரு மனு அளித்தார். அதில் பத்மா சார்பில் அளிக்கப்பட்ட 2 மனுக்களையும் வாபஸ் பெறுவதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் பத்மாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் கோர்ட்டுக்கு வர முடியவில்லை என்று கூறி மருத்துவ சான்றிதழ் ஒன்றையும் வழங்கினார். நீதிபதி முருகன் சங்கரராமன் மகன் வழங்கிய மனுவை ஏற்றுக் கொண்டார். அதையடுத்து வழக்கு விசாரணையை வருகின்ற 5-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை முடிந்து விட்டது. அரசு தரப்பு வக்கீல் தேவதாஸ் முதல் கட்ட வாதத்தை எடுத்து வைத்து விட்டார். எனவே வருகின்ற 5-ந் தேதி முதல் குற்றவாளிகள் தரப்பில் வக்கீல்கள் வாதம் நடைபெறும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்