முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைவிமர்சனம் சக்கரவர்த்தி திருமகன்

புதன்கிழமை, 31 அக்டோபர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, அக்.- 31 - அடர்ந்த காட்டில் சுற்றுலாவிற்கு வரும் வெள்ளைக்கார ஜோடிகள் ரவுடி கும்பலால் கொலை செய்யப்படுகிறார்கள். இது மாநில பிரச்சினையாக மாறுகிறது. இந்த கொலையை கண்டுபிடிக்க  சி.பி.ஐ. அதிகாரியான சக்கரவர்த்தி  தன் டீமுடன் வருகிறார். கொலை நடந்த இடத்தை பார்வையிடுகிறார். பிறகு தேடுதல் வேட்டை தொடர்கிறது. இறுதியில் கொலைகார கும்பலை சக்கரவர்த்தி டீம் கண்டுபிடித்ததா? இல்லையா? என்பது க்ளைமாக்ஸ். எம்.ஜி.ஆர். சாயலில் அறிமுகமாகும் நாயகன் சக்கரவர்த்தி  சி.பி.ஐ.அதிகாரி கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தேடுதல் வேட்டையின் போது சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆர். போலவே மோதுவது ரசிக்க வைக்கிறது. அதே போல வசனம் பேசும் போதும் நிறுத்தி நிதானமான பேசுவது சிறப்பு. எம்.ஜி.ஆர்.தோற்றம் இருந்தாலும் ஓவர் பில்டப் இல்லாமல் சக்கரவர்த்தி நடித்திருப்பது படத்துக்கு வலிமை சேர்க்கிறது. இவருடன் உதவியாளராக வரும் அமிதா, பிரியங்கா போட்டி போட்டு சக்கரவர்த்தியை காதலிப்பதிலும், கனவு காணும் பாடல் காட்சிகளிலும் கவர்ச்சி மழை பொழிந்து கிளு கிளுப்பை ஏற்படுத்துகிறார்கள். வில்லன் கிங்கார்த்திக் நடப்பில் மிரட்டியிருக்கிறார். இவருடன் வரும் ராக்  நடிப்பிலும் குறையில்லை. மற்றும் அன்பு ராணி, சேது தங்கள் கேரக்டரை நிறைவாக செய்திருக்கிறார்கள். கனகராஜ் ஒளிப்பதிவு பளிச் வீ தஷியின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்திருக்கலாம். சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் கோர்வை. எழுத்து இயக்கம் ஜி.புருஷோத்தமன். தயாரிப்பு பி.சக்கரவர்த்தி க்ரைம் கதையை த்ரிலர் கலந்து விறு விறுப்பு  குறையாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தயாரிப்பு பி.சக்கரவர்த்தி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago