முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேர்மையான அமைச்சர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்: அத்வானி

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

இந்தூர், நவ. - 1 - தேர்தலை கருதியே அமைச்சரவை மாற்றத்தை காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது. நேர்மையான அமைச்சர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்தார். அதே போன்று ஜெய்பால் ரெட்டி நீக்கப்பட்டதற்கு ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற உலக அளவிலான முதலீட்டாளர்கள் மாநாட்டில் எல்.கே. அத்வானிகலந்து கொண்டு பேசியதாவது,  பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஆட்சி நிர்வாகம் வெளிப்படையாகவும், சிறப்பாகவும் நடைபெறுகிறது. நேர்மையான தலைவர்கள் ஆட்சியில் இருப்பதால் இது சாத்தியமாகி உள்ளது. தெலுங்கானா தனி மாநில கோரிக்கை தொடர்பாக காங்கிரஸ் வெற்று அறிக்கைகளை அளித்து வருகிறது. மத்தியில் முன்பு பா.ஜ.க தலைமையிலான ஆட்சி இருந்த போது உத்தரகாண்டு, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை உருவாக்கினோம். தெலுங்கு தேசம் கட்சி ஒத்துழைப்பு தராததால் தெலுங்கானாவை உருவாக்க முடியாமல் போனது என்றார் அத்வானி. ஐக்கிய ஜனதா தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான சரத்யாதவ் கூறுகையில், ரிலையன்சின் நிர்ப்பந்தம் காரணமாக ஜெய்பால் ரெட்டி தண்டிக்கப்பட்டுள்ளார். இதை இப்படியே அனுமதித்தால் வருங்காலத்தில் மத்திய அரசை விட பலம் வாய்ந்ததாக ரிலையன்ஸ் நிறுவனம் மாறி விடும். நேர்மையான அமைச்சரான ஜெய்பால் ரெட்டி தேசிய நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டதால் மாற்றப்பட்டுள்ளார் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்