முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னா ஹசாரேவுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2012      ஊழல்

கொல்கத்தா, நவ.- 1​- நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற அண்ணா ஹசாரேவின் கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியது:​- மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, திரிணமூல் காங்கிரஸ் ஆதரவுடனேயே ஆட்சியில் அமர்ந்தது. நாங்கள் ஆதரவை வாபஸ் பெற்ற பின்னர் மத்திய அரசு `மைனாரிட்டி' அரசாக மாறிவிட்டது. இப்போது ஆட்சியில் இருப்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அல்ல, காங்கிரஸ் மட்டுமே. எனவே, ஆட்சியில் நீடிக்க மத்திய அரசுக்கு உரிமையில்லை. எனவே, நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற அண்ணா ஹசாரேவின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன். டி.வி. செட்டாப் பாக்ஸ் விவகாரம்: வீடுகளில் தொலைக்காட்சிகளை டிஜிட்டல் மயமாக மாற்றுவதற்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. போதுமான `செட்டாப் பாக்ஸ்கள்' கைவசம் இல்லாததால் உடனடியாக இத்திட்டத்துக்கு மாற முடியாது. எனவே, இப்போதைய `அனலாக்' (கேபிள் டி.வி.) முறை தொடர வேண்டும். டிஜிட்டல்மயமாவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும். தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்