முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவையில்லாமல் பேசிவம்பில் மாட்டிக் கொள்வதில் கெவின் பீட்டர்சன்

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

லண்டன், நவ. - 1 - தேவையில்லாமல் பேசி வீண் வம்பில் மாட்டிக்கொள்வதில் குத்துச் சண்டை க்கு மொகமது அலி இருப்பதைப் போ ல கிரிக்கெட்டிற்கு இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் இருக்கிறார் என்று மே.இ.தீவு அணியின் முன்னாள் கேப் டன் விவியன் ரிச்சர்ட்ஸ் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், இங்கிலாந்து வீரரான பீட்டர்ச ன் சிறப்பாக பேட்டிங் செய்கிறார் என் றும் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் நன்றாக ஆடி விமர்ச கர்களுக்கு பதிலடி கொடுப்பார் என்று ம் தெரிவித்தார். தற்போது இங்கிலாந்து சென்று உள்ள கிரிக்கெட் ஜாம்பவானான விவியன் ரிச்சர்ட்ஸ் லண்டனில் நிருபர்களைச் சந்தித்த போது, அவர்களது கேள்விக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். இங்கிலாந்து அணி தற்போது கேப்டன் அலிஸ்டார் குக் தலமையில் இந்தியா விற்கு வந்துள்ளது. இங்கு கேப்டன் தோனி தலைமையிலான அணிக்கு எதி ராக விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இரண்டு 20 -க்கு 20 போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டித் தொடர் நடக்க இருக்கிறது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி 1970 - 70 களில் சர்வதேச கிரிக்கெட்டில் கொடி கட்டிப் பறந்தது. அந்த கால கட்டத்தில் இந்தியாவிற்கு எதிரான 7 டெஸ்டில் அந்த அணி ரிச்சர்ட்ஸ் தலைமையில் வெ ற்றி பெற்றது. தனிப்பட்ட நடவடிக்கைகளை வைத்து ப் பார்க்கும் போது, உலகின் தலைசிற ந்த குத்துச் சண்டை வீரரான மொகமது அலிக்கும்,கெவின் பீட்டர்சனிற்கும் இடையே சில பொறுத்தங்கள் உள்ளது என்றும் விவியன் கூறினார். கெவின் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். ஆனால் சமயத்தில் ஏதாவது பேசி வம் பில் மாட்டிக் கொள்வார். இதே போல முன்பு மொகமது அலி இருந்தார். அவ ரும் தேவையில்லாததை பேசி சிக்க லை ஏற்படுத்திக் கொள்வார். இதனால் அவரை வீழ்த்த வேண்டும் என்று மக்க ள் விரும்பினார்கள். ஆனால் அவர் ஒரு குத்துச் சண்டை ஜாம்பவான் என்றும் ரிச்சர்ட்ஸ் கூறினார். பீட்டர்சனை அலியுடன் ஒப்பிட முடி யாது. ஏனெனில் அலி ஒரு மாபெரும் வீரர் . பீட்டர்சன்னிடம் சில குறைகள் உல்ளது. எனவே அவரை மட்டம்தட்ட வேண்டும் என்று சிலர் முயற்சிக்கிறார் கள் என்றும் விவியன் தெரிவித்தார். பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்கு முக் கியமான வீரராகத் திகழ்கிறார். அவரது பேட்டிங்கும் பார்ப்பதற்கு ஸ்டைலாக உள்ளது. ஆனால் அவருக்கு எதிரி அவ ரது பேச்சு தான் என்றும் விவியன் கூறி யிருக்கிறார். சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதன் இடையே பீட்டர்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இங்கிலாந்து கேப்டன் ஸ்ட்ராஸ் மற்று ம் இதர வீரர்களுக்கு எதிராக அவர் தெ ன் ஆப்பிரிக்க வீரர்களுக்கு எஸ்.எம். எஸ். அனுப்பியதைத் தொடர்ந்து மேற் கண்ட நடவடிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எடுத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago