முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ராசாவின் தனி செயலாளரின் சாட்சியம்

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.13 - 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி,  அளித்த சாட்சியமானது சி.பி.ஐ.க்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றும் அதில் ராசாவின் ஊழல் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றும் என்.டி.டி.வி.  தெரிவித்துள்ளது. 

தற்போது திஹார் சிறையில் இருக்கும் ராசா மீது டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணை நடக்கும்போது சி.பி.ஐ.க்கு ஆச்சாரி அளித்துள்ள சாட்சியமானது ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கும். ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேருக்கும் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு போன்றே ஆச்சாரிக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.   இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் விஷயம் பெரும் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் சி.பி.ஐ. கருதுகிறது. டெல்லி கோர்ட்டில் ஆச்சாரி அளித்துள்ள சாட்சியத்திலிருந்து ராசாவுக்கும், யூனிடெக் வயர்லெஸ் உரிமையாளர் சஞ்சய் சந்திரா, ஸ்வான் கம்பெனியின் பங்குதாரர் பல்வா மற்றும் பல கம்பெனி உரிமையாளர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. கனிமொழி பங்குதாரராக உள்ள கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி கைமாறியதில் பல்வாவுக்கு முக்கிய பங்கு இருப்பதாக தெரிகிறது. கருணாநிதி மகளான கனிமொழி பலமுறை ராசாவின் அலுவலகத்திற்கு வந்து சென்றார் என்றும் ஆச்சாரியா தெரிவித்துள்ளார். மேலும் கலைஞர் டி.வி.யை இயக்குவதில் கனிமொழி முக்கிய பங்காற்றியதும் இவரது வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரித்தபோது,  கனிமொழியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் கலைஞர் டி.வி.யை இயக்குவதில் கனிமொழி அதிக தொடர்பில்லாமல் இருந்ததாகவும் கூறப்பட்டது. கலைஞர் டி.வி.யின் நிதி மற்றும் இதர விஷயங்கள் குறித்து நிர்வாகிகள்தான் முடிவெடுத்தார்கள் என்றும் கூறப்பட்டது. கலைஞர் டி.வி.க்கும் டாடா ஸ்கைக்கும் தொடர்பை ஏற்படுத்த நீரா ராடியாவின் உதவியை ராசா பெற்றார் என்றும் ஆச்சாரி கூறியுள்ளார் என்றும் என்.டி.டி.வி மேலும் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்