முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயாகாந்திற்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமின்

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, நவ.2 - சென்னை விமான நிலையத்தில் விஜயாகாந்திடம் தொலைகாட்சி நிருபர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் சந்தித்ததை குறித்து கேள்வி எழுப்பினர்.  அப்பொழுது  தொலைகாட்சி மூத்த நிருபருக்கும்  இடையே சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து  அவர் கீழே தள்ளபட்டனர். இதையொட்டி விஜயகாந்த் மீது ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பெயரில் விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் ஜாமீன் கோரினார். அவருக்கு நேற்று முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது.

விஜயகாந்த் தொடர்ந்த  முன் ஜாமின் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

நானும் எனது மனைவியும் அவசரமாக மதுரை சென்று  கொண்டிருந்தோம். அப்பொழுது நிருபர் என்னை மறித்து கேள்வி எழுப்பினர். அதில் எனது கட்சி எம்.எல்.ஏகள் முதல்வரை சந்தித்தது குறித்து  முதலில் கேள்வி எழுப்பினர். நான் நாட்டு பிரச்சனையை பற்றி கேள்வி  கேட்காமல் எனது கட்சி பிரச்சனையை முதலில் கேட்கிறீர்களே என்றேன். மேலும் என்னை அதே கேள்வியை கேட்டு கோபப்பட வைத்தனர். இவ்வாறு மீது எந்த தவறும் இல்லை. ஆகையால்  எனக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும். என தனது மனுவில்  கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன் ரூபாய் 1 லட்சத்தை பிணய தொகையாக  செலுத்தி அதே தொகைக்கான இரு நபர் ஜாமீன் அளித்து  தனக்கு முன் ஜாமீன் பெற்று கொள்ளலாம். மேலும் இந்த வழக்கின் விசாரணைக்கு போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு  வழங்க வேண்டும். அதன் பிறகு சாட்களை மிரட்டலுக்கு ஆள்ளாக்க கூடாது  என நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்